cnn
தாங்கள் அறிந்திருந்த ஒரேயொரு முடிக்குரிய தலைவரின் அஞ்சலி செலுத்துவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் பக்கிங்காம் அரண்மணைக்கு வெளியே காணப்பட்டனர்.
எலிசபெத் மகாராணியின் மறைவுச்செய்தி வெளியானதும் மக்கள் மலர்களையும் மெழுகுதிரிகளையும் வைத்து அஞ்சலி செலுத்துவதற்காக ஆயிரக்ககணக்கில் அரண்மனை நோக்கி புறப்பட்டனர்.
லண்டனை சேர்ந்த சுற்றுலாபயண வழிகாட்டியான நிக்கொலஸ் பிளேயர் 41 – மருத்துவர்கள் மகாராணியின் உடல்நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ளனர் என்ற செய்தி வெளியானதும் எனது உடல் நடுங்கதொடங்கியது என தெரிவித்தார்.
அவர் எங்கள் தேசத்தின் மூதாட்டி அவர் எங்கள் அனைவரினதும் வாழ்க்கையினதும் ஒரு பகுதி என பிளேயர் சிஎன்என்னிற்கு தெரிவித்தார்.
காலையில் தனது சுற்றுலா வழிகாட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் அவர் மகாராணியின் உடல்நிலை குறித்த செய்திக்காக அரண்மணை வாயிலிற்கு திரும்பினார். மகாராணியின் இல்லத்தில் இருப்பது முக்கியம் என்ற உணர்வுடன் நான் அரண்மணை வாயிலிற்க்கு வந்தேன் என அவர் தெரிவித்தார்.
அந்த உணர்வை பலரிடம் காணமுடிந்தது- மதியத்தின் பின்னர் ஆயிரக்கணக்கானவர்கள் அரண்மணை நோக்கி வரத்தொடங்கினார்கள் - இந்த அரண்மணையின் பல்கனியில் இருந்தவாறே மகாராணி பல சந்தர்ப்பங்களில் பொதுமக்களிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
பின்னர் நிச்சயமற்ற நிலையும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
மகாராணியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கேள்விப்பட்டதும் நேரே இங்கே வரவேண்டும் என தீர்மானித்தோம் என குறிப்பிட்டார் மைக்கல் என்சர்.
நான் மகாராணிக்கான எனது அன்பை நேசத்தை வெளிப்படுத்த விரும்பினேன் என்னால் பல்மொராலிற்கு செல்ல முடியாது ஆனால் பக்கிங்காம் அரண்மனைக்கு வரமுடியும் அது அவருக்கு அருகில் இருப்பதை போன்றது அவர் எனது தாய் என்றால் நான் அவரின் கரங்களை பற்றியபடி இருப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.
நான் இங்கு அவருக்காக பிரார்த்தனை செய்வதற்காகவே இங்கு வந்தேன் என தெரிவி;த்த சு என்சர் நாங்கள் கிறிஸ்தவர்கள் மகாராணி மிகுந்த மத நம்பிக்கை கொண்டவர் அதனை நாங்கள் அங்கீகரிக்கின்றோம் என தெரிவித்தார்.
தங்கள் அலுவலக பணிகள் முடிவடைந்ததும் மருத்துவர்கள் ஆசிரியர்கள் இளைஞர்கள் என பலரும் அடுத்த அறிவிப்பை அறிவதற்காக பதற்றத்துடன் பக்கிங்காம் அரண்மணை நோக்கி விரைந்தனர்.
மகாராணி ஸ்கொட்லாந்தின் பல்மொரால் அரண்மணையில் உயிரிழந்த செய்தி மாலை 6.30 மணியளவில் வெளியானதும் அங்கு ஒருவித அமைதி உருவானது.
அரண்மணை பணியாளர்கள் செய்தியை உறுதிப்படுத்தினார்கள்,இன்று மதியம் பல்மோரலில் மகாராணி அமைதியாக இயற்கை எய்தினார் என்ற அறிவிப்பை அரண்மணையின் வாயிலின் நடுவே அவர்கள் ஒட்டிச்சென்றனர்.
வின்ட்செர் மாளிகைக்கு சென்ற பின்னர் இன்று பங்கிங்காம் அரண்மணையை பார்வையிட வந்ததாக கொவென்ரியை சேர்ந்த தம்பதியினர் தெரிவித்தனர். முகாராணியின் உடல்நிலை குறித்த கவலையான அறிவிப்பு வெளியான போதிலும் அரண்மணை பணியாளர்கள் அதனை வெளிப்படுத்தவில்லை என தெரிவித்தார்.நிலைமையை உணர்ந்து அவர்களும் பக்கிங்காம் அரண்மணைக்கு வெளியே காணப்பட்ட மக்களுடன் இணைந்துகொள்ள தீர்மானித்தனர்.
மகாராணி அனைவரினதும் வாழக்கையிலும் ஆழப்பதிந்தவர் பல தலைமுறைகளின் வாழ்வில் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM