பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிஸபெத் காலமானார் 

Published By: Priyatharshan

09 Sep, 2022 | 06:56 AM
image

பிரித்தானிய மகாராணியான 2 ஆம் எலிஸசெபத் அவரது 96 ஆவது வயதில் காலமானார்.

2 ஆம் எலிஸசெபத் மகாராணி பிரித்தானியாவின் பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார்.

இந்நிலையில், ராணி எலிசபெத்துக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. 

இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக் குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராணி எலிசபெத் காலமானார்.

பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிசபெத் அவரது 96 ஆவது வயதில் ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

மகாராணியின் மரணத்துடன், அவரது மூத்த மகன் சார்ள்ஸ், முன்னாள் வேல்ஸ் இளவரசர், புதிய ராஜாவாகவும் 14 கொமன்வெல்த் நாடுகளுக்குத் தலைவராகவும் நாட்டை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

“ 8 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் பால்மோரலில் மாகாராணி நிம்மதியாக உயிரிழந்துள்ளார்.

வைத்தியர்கள் ராணியை மருத்துவக் கண்காணிப்பில் வைத்த பிறகு, ராணியின் குழந்தைகள் அனைவரும் அபெர்டீனுக்கு அருகிலுள்ள பால்மோரலுக்குப் பயணம் செய்தனர்.

இங்கிலாந்து மகாராணி எலிசெபத் காலமானது அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

26 வயதில் பிரித்தானியாவின் மகாராணியாக மகுடம் சூடிய இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பல சமூக மாற்றங்கள் ஏற்பட்டபோது, 1952ஆம் ஆண்டு இவர் பிரித்தானிய மகாராணியான மகுடம் சூட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13