(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)
பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு சிலருக்கு அநீதி இழைக்கப்படும்போது வாய் திறக்காதவர்கள் தமக்கு அநீதி நடக்கும்போது மட்டும் ஏனையவர்களும் பேச வேண்டுமென எதிர்பார்க்கின்றார்கள்.ஆளும் தரப்பில் இருந்த போதும் எனது உரிமை மறுக்கப்பட்ட போது எவரும் அது குறித்து குரல் கொடுக்கவில்லை என சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது விவாதத்தின் போது உரையாற்ற வாய்ப்பளிக்கப்படாமை குறித்து சுயாதீன உறுப்பினர் டலஸ் அழகபெருமவின் கருத்துக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஆளும் தரப்பில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களுக்கு விவாதத்தின் போது ஒதுக்கப்படும் காலவகாசம் தொடர்பில் டலஸ் அழகப்பெரும முன்வைத்த விடயம் குறித்து அவதானம் செலுத்தப்படும்.
கடந்த காலத்தை காட்டிலும் தற்போது சமூக கட்டமைப்பும்.மனித உரிமைகளும் முன்னேற்றமடைந்துள்ளன.ஆகவே அன்றைய கோணத்துடன் ஒப்பிட்டு தற்போதைய சூழ்நிலையை மதிப்பிட முடியாது.அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள கருத்து சுதந்திர உரிமை அனைவருக்கும் உண்டு.அரசியலமைப்பிற்கமையவே அனைவவரும் செயற்பட வேண்டும்.
சபை முதல்வராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து சபைக்கு எடுத்துக்காட்டாக செயற்படுகிறேன்.எதிர்கட்சி தலைவர் உரையாற்றும் போது இடையில் எழுந்து ஒழுங்கு பிரச்சினையை எழுப்பவில்லை.அத்துடன் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முறையாகவும்,பொறுப்புடனும் கருத்துரைத்துள்ளேன்.
அரசியலமைப்பிற்கு அமைய பதிலளித்துள்ளேன்.இந்த மாற்றத்தை சபையில் உறுதிப்படுத்துவோம்.முறைமை சிறந்ததாக இல்லாத காரணத்தினால் தான் மக்கள் வெளியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மாறுப்பட்ட கருத்தை குறிப்பிடுகிறார்கள்,எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
டலஸ் அழகப்பெரும முன்வைத்த விடயம் குறித்து கடந்த கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.எதிர்தரப்பில் உள்ள சுயாதீன தரப்பினருக்கு விவாதத்தின் போது உரிய காலவகாசத்தை வழங்க ஆளும் தரப்பின் பிரதம கொறடா இணக்கம் தெரிவித்தார்.இருப்பினும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை.
இவ்விடயம் குறித்து நாளை (இன்று) இடம்பெறும் கட்சி தலைவர் கூட்டத்தில் அவதானம் செலுத்துமர்று வலியுறுத்துகிறேன்.நான் ஆளும் தரப்பில் இருந்துக் கொண்டு விவாதத்தில் உரையாற்ற வாய்ப்பு கோரிய போது அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.விடயதானம் தொடர்பில் தெளிவுள்ளவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.அது தொடர்பில் எவரும் அவ்வேளை கதைக்கவில்லை.
நிதி குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டேன்,ஆனால் இது குறித்து எவரும் கருத்துரைக்கவில்லை.தனக்கு ஒன்று நேரும் போதே அதனை பற்றி கதைக்கிறார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM