வவுனியாவில் போதை ஊசியைப் பயன்படுத்தும் சிறுவர்கள் அதிகரிப்பு - பெற்றோர்கள் கவனம் 

Published By: T Yuwaraj

08 Sep, 2022 | 05:21 PM
image

K.B.சதீஸ் 

வவுனியாவில் அண்மைய சில காலமாக சிறுவர் மத்தியில் போதைப் பயன்பாடுகள் ஊசி ஏற்றும் நடவடிக்கைகள் சிறுவர்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கின்றது .

இந்நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பொலிசார், பெற்றோர்கள் மற்றும் அரச நிறுவனங்கள் முன்வரவேண்டும் . மாணவர்கள் தவறான வழிகளில் சென்றால் அவர்களின் எதிர்காலம் சிதைவடைந்துவிடும் எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகள் மீது அதிக கவனமுடன் செயற்பட வேண்டும் என தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவரும் சமூக ஆர்வலருமான எஸ் . சந்திரகுமார் தெரிவித்துள்ளார் .

இன்றைய நிலைமைகளில் 16 வயதிலிருந்து 22 வயதிற்குட்பட்ட பாடசாலை செல்லும் மாணவர்கள் பல்வேறு போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகி வருகின்றனர் . அத்துடன் வவுனியாவில் அண்மைய சில காலமாக போதைப் பயன்பாடுகள் ஊசி மூலம் ஏற்றும் செயற்பாடுகள் அதிகரித்து செல்கின்றன.

இவ்வாறான சிலர் அடையாளம் காணப்பட்டு பொலிசாரின் உதவியுடன் வெலிக்கந்தை புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் . 16 வயதிற்குட்பட்ட பாடசாலை செல்லும் மாணவர்களே அதிகளிவில் காணப்படுகின்றனர் . எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளில் அதிக கவனம் செலுத்தி அவர்கள் எங்கு செல்கின்றார்கள் யாருடன் பழக்கம் வைத்திருக்கின்றார்கள் எவ்வாறான நிலைமைகளில் வீடு வருகின்றார்கள் என்ற தகவல்களை துல்லியமாக அறிந்து வைத்திருக்க வேண்டும் . 

மாணவர்களுக்கு எவ்வழிகளில் போதை ஊசி வழங்கப்படுகின்றன இதை யார் எங்கிருந்து விநியோகம் செய்யப்படுகின்றன போன்ற விடயங்கள் பொலிசாரால் கண்டறியப்பட வேண்டும். இவ்வாறு போதைப் பாயன்பாட்டில் ஈடுபடும் மாணவர்களில் தந்தையை இழந்த மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தந்தை போன்ற குடும்பங்களில் அதிகளவில் காணப்படுகின்றது எனவே இந்நடவடிக்கைகயைத் தடுப்பதற்கு பொலிசார் , சிவில் பாதுகாப்புக்குழுகள் , அரச நிறுவனங்கள் கிராம மட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து இறுக்கமான நடைமுறைகளை மேற்கொள்ள முன்வருமாறு மேலும் தெரிவித்துள்ளார் .

...

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிருசுவில் கொலை சம்பவம்: தந்தையை கொன்ற...

2023-03-31 17:33:17
news-image

கடும் வெப்பமான காலநிலை : அதிகம்...

2023-03-31 16:50:00
news-image

நியூஸிலாந்துடனான தொடரில் தோல்வி அடைந்த இலங்கை...

2023-03-31 18:22:56
news-image

திருகோணமலை மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து...

2023-03-31 18:23:10
news-image

மிரிஹானவுக்கு அழைக்கப்படும் 3,000 பாதுகாப்பு தரப்பினர்!

2023-03-31 16:52:44
news-image

மஹரகம கபூரிய்யா மத்ரஸாவின் சொத்துக்களை விற்க...

2023-03-31 16:42:54
news-image

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாளை...

2023-03-31 16:29:30
news-image

பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் கூட்டு...

2023-03-31 16:15:25
news-image

மாணவர் பஸ் சேவை,முச்சக்கர வண்டி கட்டணம்...

2023-03-31 16:09:31
news-image

டயானா கமகேவின் மனு தொடர்பில் நீதிமன்றின்...

2023-03-31 16:56:00
news-image

நீர்கொழும்பு, கட்டானை பகுதியில் ஆடை தொழிற்சாலையின்...

2023-03-31 16:33:45
news-image

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கையை கட்டியெழுப்ப...

2023-03-31 14:45:33