வட மாகாண மக்கள் இராணுவத்தினர் அவசியமென கருதுகின்றனர் - சரத்வீரசேகர

By T. Saranya

08 Sep, 2022 | 03:54 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தினரை அகற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாத்திரமே குறிப்பிட்டுக்கொள்கின்றனர்.  ஆனால் மாகாண மக்கள்  இராணுவத்தினர் அவசியம் என எண்ணுகிறார்கள் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத்வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவிட்டு வரி சட்டமூலம்  தொடர்பான விவாதத்தின் போதுஇ வடக்கில் இராணுவத்தினர் பொதுமக்களின் காணிகளை தொடர்ந்தும் கையகப்படுத்தி வைத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறிய நிலையில், அதற்கு பதிலளிக்கையிலேயே சரத் வீரசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சரத் வீரசேகர மேலும் குறிப்பிட்டதாவது,

யுத்தக் காலத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பு காரணங்களுக்காக கைப்பற்றப்பட்ட காணிகளில் 90 வீதமானவை வடக்கு மற்றும் கிழ்கு மாகாண மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன. மிகுதி காணிகளே பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகின்றனர். இராணுவம் இருப்பது யாழ்ப்பாண மக்களுக்கு அவசியமாகும். ஆனால் தமிழ்க் கூட்டமைப்பு மாத்திரமே இராணுவத்தினரை அங்கிருந்து அகற்ற வேண்டும் என குறிப்பிடுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாதுகாப்பு காரணிகளின் நிமித்தமே இராணுவத்தினர் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

இராணுவம் தொடர்பில் அரசியல் தரப்பினரே தவறான கருத்துக்களை குறிப்பிட்டுக்கொள்கிறார்கள் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38
news-image

2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்...

2022-11-28 19:57:39
news-image

மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் நழுவிச்செல்லும்...

2022-11-28 19:54:34