பொருளாதாரத்தை முன்னேற்றும் எவ்வித திட்டங்களும் அரசாங்கத்திடம் கிடையாது - நாலக கொடஹேவா

Published By: Digital Desk 3

08 Sep, 2022 | 05:17 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

வரி அதிகரிப்பின் ஊடாக மாத்திரம் அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடியாது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவதை மாத்திரம் பொருளாதார மீட்சிக்கான திட்டமாக குறிப்பிடும் அரசாங்கத்திடம் பொருளாதாரத்தை முன்னேற்றும் எவ்வித திட்டங்களும் கிடையாது என பாராளுமன்ற சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

பாராளுமன்றில் வியாழக்கிழமை (8)  இடம்பெற்ற சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுத்தொகை சட்டமூலத்தின் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வரி அதிகரித்து அரச வருமானத்தை ஈட்டிக் கொள்ளலாம் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதார கொள்கையாக கொண்டுள்ளர். நல்லாட்சி அரசாங்கத்தில் அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக வரி அதிகரிக்கப்பட்டதால் பொருளாதாரம் வளர்ச்சியடையவில்லை.

2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வரி அதிகரிக்கப்பட்டதால் நாட்டின் அபிவிருத்திகள் இடைநிறுத்தப்பட்டன. 2014ஆம் ஆண்ட 5.5 சதவீதமாக காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி 2.1 வீதத்தினால் குறைவடைந்தது.

ரூபாவின் வீழ்ச்சி துரிதப்படுத்தப்பட்டதால்,நாட்டின் சகல அபிவிருத்தி பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.தற்போதைய நிலையில் 75 சதவீத சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

வரி அதிகரிப்பினால் பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிப்பு செய்யும் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர் மேலும் நெருக்கடிக்குள்ளாகுவார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தியத்திடமிருந்து கடன் பெறுவதை மாத்திரமே அரசாங்கம் பிரதான கொள்கையாக கொண்டுள்ளது.48 மாத காலத்தை வரையறுத்த 2.9 பில்லியன் நிதி கிடைக்கப்பெறுமா என்பதே சந்தேகத்திற்குரியது. இவ்வருடத்தில் செலுத்த கடன் தொகையும்,வெளிநாட்டு பிணை முறிகளும் நிலுவையில் உள்ளன. 

கடன் பெறுதில் மாத்திரம் அவதானம் செலுத்தாமல் தேசிய தொழிற்துறையின் ஊடாக பொருளாதாரத்தை மேம்படுத்த அவதானம் செலுத்த வேண்டும்.

2020 மற்றும் 2021ஆம் ஆண்டு காலப்பகுதியில் பல்வேறு காரணிகளினால் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் வீழ்ச்சியடைந்தது.2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் முன்னேற்றமடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

2018ஆம் ஆண்டு சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் ஊடாக மாத்திரம் அ2.3 பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றது,ஆகவே சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை விரிவுப்படுத்தி, அத்துறையில் ஈடுப்படும் தொழிற்துறையினருக்கு நிவாரணம் வழங்கி சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த வேண்டும்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் இராஜாங்க அமைச்சுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளமை தவறானதொரு எடுத்துக்காட்டாகும். அரச செலவினங்கள் குறைக்கப்பட வேண்டும் என குறிப்பிடும் ஜனாதிபதி இராஜாங்க அமைச்சுக்களின் நியமனத்தை அதிகரித்துள்ளமை கொள்கைக்கு முரணானதாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18