இலத்தீன் அமெ­ரிக்­காவில் வெள்ள அனர்த்தம் 5 பேர் உயிரிழப்பு; 155,500 பேர் இடம்­பெ­யர்வு

Published By: Robert

26 Dec, 2015 | 09:34 AM
image

இலத்தீன் அமெ­ரிக்­காவில் வெள்ள அனர்த்தம் கார­ண­மாக குறைந்­தது 5 பேர் பலி­யா­ன­துடன் 155,500 பேர் வீடு­வா­சல்­களை விட்டு இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

இந்த வெள்ள அனர்த்­தத்தால் பரா­குவே, ஆர்­ஜென்­டீனா மற்றும் உரு­குவே ஆகிய நாடுகள் மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

பரா­கு­வேயில் மட்டும் சுமார் 130,000 பேர் வீடு­வா­சல்­களை விட்டு இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

அந்­நாட்டு ஜனா­தி­பதி ஹொரா­சியோ கார்டெஸ் அவ­ச­ர­கால நிலை­மையைப் பிர­க­ட­னப்­ப­டுத்தி அனர்த்த நிதி­யாக 3.5 மில்­லியன் அமெ­ரிக்க டொலரை வழங்க நட­வ­டிக்கை எடுத்­துள்ளார்.

பரா­கு­வேயில் அஸன்­சியன் நக­ரையும் அயல்­நா­டான பிரே­சி­லி­லுள்ள பொஸ் டி இகு­வா­ஸு­வையும் இணைக்கும் சர்­வ­தேச பாதையில் பய­ணித்த மூவர் மர­மொன்று அவர்­க­ளது வாக­னத்தின் மீது சரிந்து விழுந்­ததால் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

அத்­துடன் அந்­நாட்டின் தலை­ந­கரில் மோட்டார் சைக்­கிளில் பய­ணித்த பெண்­ணொ­ருவர் சரிந்து விழுந்த மர­மொன்றின் கீழ் சிக்கி உயி­ரி­ழந்­துள்ளார்.

அந்­நாட்டின் தலை­ந­கரில் இடம்­பெற்ற இதை­யொத்த சம்­ப­வங்­களில் பலர் காய­ம­டைந்­துள்­ள­தாக தேசிய அவ­ச­ர­கால செய­லகம் தெரி­விக்­கி­றது.

ஆர்­ஜென்­டீ­னாவில் மேற்­படி வெள்ள அனர்த்தம் கார­ண­மாக குறைந்­தது 20,000 பேர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

என்ட்றி றியொஸ் மாகா­ணத்தில் உரு­குவே ஆற்­றுக்கு அருகில் வசிப்­ப­வர்கள் இந்த வெள்ள அனர்த்­தத்தால் மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

வட­கி­ழக்கு ஆர்­ஜென்­டீ­னாவில் புயலால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த தனது வீட்­டிற்கு செல்ல முயன்ற 13 வயது சிறுவன் ஒருவன் மின்­சார தாக்­கு­த­லுக்கு உள்­ளாகி உயி­ரி­ழந்­துள்ளான்.

அதே­ச­மயம் உருகுவேயில் வெள்ள அனர்த் தத்தால் குறைந்தது 5,500 பேர் இடம் பெயர்ந் துள்ளனர்.

இந்நாட்டில் இந்த வெள்ள அனர்த்தத்தை யொட்டி அவசரகால நிலைமை பிரகடனப்ப டுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக பாலியல்வன்முறை குற்றச்சாட்டுகளை...

2023-05-31 20:24:01
news-image

சமாதானப் பேச்சுவார்த்தைகளை சூடான் இராணுவம் இடைநிறுத்தியது

2023-05-31 15:35:11
news-image

ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியா?...

2023-05-31 14:17:11
news-image

மஹ்ஸா அம்னியின் மரணம் குறித்த செய்திகளை...

2023-05-31 13:06:57
news-image

ரயானா உட்பட ஏஎக்ஸ்2 விண்வெளியாளர்கள் பூமிக்குத்...

2023-05-31 13:15:22
news-image

குடியேற்றவாசிகளிற்கு எதிரான பிரச்சாரங்களை மீண்டும் ஆரம்பித்தார்...

2023-05-31 12:39:20
news-image

வட கொரியா ஏவிய உளவுச் செய்மதி...

2023-05-31 10:48:09
news-image

புதிய பாராளுமன்ற கட்டடம் புதிய இந்தியாவை...

2023-05-31 12:28:09
news-image

நதிகளுக்குச் செல்லும் பதக்கங்கள்… – முகமது...

2023-05-31 10:33:31
news-image

புதிய உத்வேகத்தில் இங்கிலாந்து - இந்திய...

2023-05-31 12:27:48
news-image

நியூஸிலாந்தில் 6.2 ரிக்டர் பூகம்பம்

2023-05-31 09:48:14
news-image

கொவிட்19 ஆய்வுகூடக் கசிவுக் கொள்கையை நிராகரிக்க...

2023-05-30 17:19:28