இரு தந்­தை­யர்­களைக் கொண்ட இரட்டைக் குழந்­தை­களை பிர­ச­வித்த யுவதி

Published By: Vishnu

08 Sep, 2022 | 12:34 PM
image

போர்த்­துகல் நாட்டைச் சேர்ந்த ஒரு யுவதி, வெவ்வேறு தந்­தை­யர்­களைக் கொண்ட இரட்டைக் குழந்­தை­களை பிர­ச­வித்­துள்ளார் என செய்தி வெளி­யா­கி­யுள்­ளது.

19 வய­தான இந்த யுவதி, தான் போர்த்­துக்­கலின் கொய்யஸ் மாநி­லத்தின் மினேய்ரோய் நகரைச் சேர்ந்­தவர் எனத் தெரி­வித்­துள்ளார்.

ஒரே தினத்தில் இரு ஆண்­க­ளுடன் இந்த யுவதி பாலியல் உறவு கொண்­டதால் அவ­ருக்கு வெவ்வேறு தந்­தை­யர்­களைக் கொண்ட இரட்டைக் குழந்­தைகள் பிறந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

உலகில் இவ்­வாறு இரு வேறு தந்­தை­யர்­களைக் கொண்ட இரட்டைக் குழந்­தைகள் பிறந்­த­தாக பதி­வான 20 ஆவது சந்­தர்ப்பம் இது­வாகும். இத்­த­கைய கருத்­த­ரிப்பு 

'ஹெட்­ரோ­பே­ரன்டல் சுப்­பர்­ஃபெக்­குன்­டேசன்' (heteroparental superfecundation) என குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.

இக்­கு­ழந்­தைகள் பிறந்து 8 மாதங்­களின் பின், அவர்கள் இரு­வ­ரி­னதும் தந்தை என இந்த யுவதி நம்­பிய ஆண் மர­பணு சோதனை நடத்­தினார். ஆனால், ஒரு குழந்­தைக்கு மாத்­தி­ரமே அவர் தந்தை என்­பது மர­பணு சோதனை மூலம் தெரி­ய­வந்­த­தாக அந்த யுவதி தெரி­வித்­துள்ளார். 

'இப்­பெ­று­பேற்றை அறிந்து நான் வியப்­ப­டைந்தேன். இரு மகன்­களும் ஒரே மாதி­ரி­யான தோற்றம் கொண்­டி­ருந்த போதிலும், இது எப்­படி சாத்­தியம் எனத் தெரிந்­தி­ருக்­க­வில்லை' என அவர் கூறினார்.

'குறித்த தினத்தில் நான் மற்­றொரு ஆணு­டனும் பாலியல் உறவு கொண்­டமை நினைவில் உள்­ளது. அந்­ந­பரை அழைத்து மர­பணு பரி­சோ­தனை செய்­து­கொள்­ளு­மாறு கூறினேன். அதில் 'நேர்­மறை' பெறு­பேறு கிடைத்­தது' என அந்த யுவதி தெரி­வித்­துள்ளார். 

எனினும், இக்­கு­ழந்­தை­களின் பிறப்­புச் சான்­றி­தழ்­களில் அவர்­களின் தந்­தை­யாக ஒரு ஆணின் பெயர் மாத்­தி­ரமே பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. 

'இரு குழந்­தை­க­ளையும் அவர் பரா­ம­ரிக்­கிறார். அவர்­க­ளுக்குத் தேவை­யான அனைத்து உத­வி­க­ளையும் அவர் வழங்­கு­வதுடன் எனக்கும் மிகவும் உத­வு­கிறார்' எனவும் அந்த யுவதி தெரி­வித்­துள்ளார்.

இந்த அசா­தா­ரண கர்ப்ப விவ­காரம் குறித்து ஆராய்ந்த டாக்டர் டூலியோ ஜோர்ஜ் பிரான்கோ இது தொடர்­பாக போர்த்­துகல் ஊட­க­மொன்றில் விப­ரிக்­கையில், 

'ஒரே தாயின் இரு முட்­டைகள், இரு வேறு ஆண்­களின் உயி­ர­ணுக்­களால் கருத்­த­ரிக்­கப்­ப­டு­வதால் இது நடை­பெ­று­கி­றது.  

இப்­பெண்ணின் கர்ப்­ப­காலம் பிரச்­சினை எது­வு­மின்றி சுமு­க­மாக இருந்­தது. இரு ஆண் குழந்­தை­களும் நல­மாக உள்­ளன. அவர்­க­ளுக்கு ஆரோக்­கிய பிரச்­சி­னைகள் எது­வு­மில்லை.

இத்­த­கைய கர்ப்பம் மிக அரி­தா­ன­தாகும். ஒரு மில்­லி­யனில் ஒன்­றா­கவே இது உள்­ளது. எனது வாழ்­க­்கையில் நான் இத்­த­கைய ஒரு விவகாரத்தை நான் பார்ப்பேன் என நான் எண்ணியிருக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

மேற்படி குழந்தைகளுக்கு தற்போது ஒரு வருடம் மற்றும் 4 மாதங்கள் வயதாகும் நிலையில், இது குறித்து  தகவல்களை மேற்படி மருத்துவர் இவ் வாரம் வெளியிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right