பெண்களும் விதிவிலக்கல்ல...

By Devika

08 Sep, 2022 | 08:57 AM
image

சிங்கிள் கலாசாரம் இப்போது பெண்களிடமும் அதிகரித்து வருகிறது. 25 வயதை அடைந்துவிட்ட ஒரே காரணத்துக்காக திருமணம் செய்துகொள்ள பெண்கள் தயாராக இல்லை.

'திருமணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. ஆண்களைப் போலவே குறிக்கோள்களும் எதிர்காலத்தை பற்றிய கனவுகளும் எங்களுக்கும் உண்டு" என்கிற மனோபாவம் பெண்களிடம் அதிகமாகி வருகிறது என்கின்றன பல்வேறு ஆய்வுகள்.

பெண்கள் மற்றவர்களின் உதவியையும் ஆதரவையும் எதிர்பார்ப்பதும் குறைந்துவருகிறது. திருமணம் என்ற பெயரில் மற்றவர்கள் தங்கள் மேல் திணிக்கும் வாழ்க்கையை விட, தாங்களாகவே தேர்ந்தெடுத்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு, அதற்கு மதிப்பளிப்பதையே பெண்கள் விரும்புகிறார்கள். அதுதான் பெண்களின் சிங்கிள் வாழ்க்கைக்குக் காரணம் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right