பாலியல் இலஞ்சம்  பெற முயன்ற  யாழ். அமைப்பாளரும் அவரது - செயலாளரும் கைது ; இருவருக்கும் விளக்கமறியல் 

Published By: Digital Desk 4

07 Sep, 2022 | 10:31 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

அரச தொழில் பெற்றுத் தருவதாக கூறி பெண் ஒருவரிடம்  பாலியல் இலஞ்சமும், 50 ஆயிரம் ரூபா பணமும் பெற்றுக்கொள்ள முனைந்ததாக கூறி  இலங்கை ஐக்கிய முன்னணியின்  யாழ். மாவட்ட அமைப்பாளரும் அவரது செயலாளர் எனக் கூறப்படும் நபரும் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொல்கஹவல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகளை முன்னெடுத்து சந்தேக நபர்களை புறக்கோட்டை - மிதக்கும் சந்தை பகுதியில்   உணவகம் ஒன்றுக்குள் வைத்து கைது செய்ததாக  இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினர் நீதிமன்றுக்கு இன்று ( 7) அறிவித்தனர்.

 அதன்படி குறித்த இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன  கெக்குனவல உத்தரவிட்டார்.

 கல்முனை பகுதியைச் சேர்ந்த,  ஸ்ரீ லங்கா ஐக்கிய முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் என கூறப்படும்  நபரும் மற்றும்  அவரது செயலர் என கூறப்படும் கொழும்பு 13, ஆட்டுப்பட்டித் தெருவைச் சேர்ந்த  ஒருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.

முறைப்பாட்டாளரான பெண்ணிடம், ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும், பாலியல் இலஞ்சமும் சந்தேக நபர்களால் கோரப்பட்டுள்ளதாகவும், அதில் 50 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக்கொள்ள முனைந்த போது அவர்களைக் கைது செய்ததாகவும்  இலஞ்ச ஊழல் ஆணைக் குழு சார்பில் மன்றில் ஆஜராகிய உப பொலிஸ் பரிசோதகர்  சந்ரசிறி, உப பொலிஸ் பரிசோதகர்  ஹர்ஷ,  பொலிஸ் சார்ஜன் சமிந்த,  மற்றும் விஜேசிங்க ஆகியோர் அடங்கிய குழுவினர் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க அபின் மற்றும்...

2026-07-14 16:58:44
news-image

அரசியலமைப்புடன் விளையாடுவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்;...

2026-07-14 15:42:45
news-image

நீதித்துறையை ஆக்கிரமித்து எதிர்க்கட்சிகளை முடக்க அரசு...

2026-07-14 17:44:19
news-image

அரசை விமர்சித்து சரியான பாதைக்கு திருப்புவோம்;...

2026-07-14 14:22:50
news-image

204 மில்லியன் பெறுமதியான அதிநவீன ஆய்வக...

2026-07-14 14:27:28
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு பரிந்துரைகள் அமுல்படுத்தாததே...

2026-07-14 14:35:40
news-image

இலங்கை மற்றும் தான்சானியாவின் நீரியல் வளர்ப்புத்...

2026-07-14 22:02:43
news-image

முன்னாள் கட்டார் நாட்டின் தலைவரின் இறுதிச்சடங்கில்...

2026-07-14 21:57:06
news-image

விவசாயிகளுக்கு சலுகைக் கடன் வழங்க புதிய...

2026-07-14 18:25:14
news-image

ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனம் அம்பலம் ;...

2026-07-14 18:26:52
news-image

உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலேயே பிரமுகர்...

2026-07-14 18:25:38
news-image

புதிய தமிழ் - முஸ்லிம் கட்சிகளின்...

2026-07-14 18:24:09