இலங்கையின் கடன்கள் ஸ்திரமான நிலையில் இல்லை - சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர்

Published By: Vishnu

07 Sep, 2022 | 08:32 PM
image

(நா.தனுஜா)

இலங்கையின் கடன் நிலைவரம் ஸ்திரமான தன்மையில் இல்லை என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

உலகின் பெரும்பாலான நாடுகளில் நிதியியல் இடைவெளி இல்லாமல் போயிருப்பதாகவும் சுமார் 25 சதவீதமான சந்தைகளின் கடன் நிலைவரம் ஸ்திரமான நிலையில் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

'இலங்கை குறித்து சிந்தித்துப் பார்ப்பதுடன் பெரும்பாலான நாடுகள் அதனையொத்த நிலையிலேயே இருக்கின்றது. கானா போன்று மிகவும் வலுவான அடிப்படைகளைக் கொண்டிருக்கின்ற நாடுகள்கூட ஏனைய வெளியகத்தாக்கங்களால் சந்தைகளை நாடுவதில் பாரிய சவால்களை எதிர்கொண்டிருக்கின்றது.

அதேவேளை வறிய நாடுகளில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவை கடன்களை மீளச்செலுத்தமுடியாத அச்சுறுத்தல் நிலைக்கு முகங்கொடுத்திருக்கின்றன' என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் கடந்த வாரம் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டதை அடுத்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்த கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, இருதரப்பினருக்கும் இடையில் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதை வரவேற்பதாகவும் இது இலங்கை முன்நோக்கிப் பயணிப்பதற்கான மிகமுக்கிய நகர்வாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறானதொரு பின்னணியிலேயே தற்போது அவர் மேற்குறிப்பிட்டவாறானதொரு கருத்தை வெளியிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த...

2024-02-24 07:36:47
news-image

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய...

2024-02-24 07:12:23
news-image

இன்றைய வானிலை 

2024-02-24 07:19:01
news-image

தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன்...

2024-02-24 07:21:28
news-image

வெற்றிலைக்கேணியில் விபத்து : செய்தி சேகரிக்க...

2024-02-24 00:29:49
news-image

நாட்டின் தேசிய அடையாளம், சட்டத்தின் ஆட்சியை...

2024-02-23 22:05:26
news-image

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த...

2024-02-23 22:07:18
news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21
news-image

வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட...

2024-02-23 19:40:36