உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில் சாதனை படைத்த சைவமங்கையர் வித்தியாலய மாணவிகள் கௌரவிப்பு

07 Sep, 2022 | 04:52 PM
image

கொழும்பு சைவமங்கையர் வித்தியாலய மாணவிகள்  அண்மையில் வெளிவந்த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில்  சாதனை படைத்துள்ளனர். 

அவ்வகையில்  3A  பெறுபேற்றினை 20  மாணவியரும் 2A B பெற்ற 7 மாணவியரும் சைவமங்கையர் வித்தியாலயத்தின் அதிபர் திருமதி அருந்ததி இராஜவிஜயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கெளரவிக்கப்பட்டனர். 

இந்நிகழ்வில் கழக முகாமையாளர் செல்வி மாலா சபாரட்ணம், கழக உறுப்பினர்கள்  ஆசிரியர்கள் மற்றும்  மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர். 

இந்நிகழ்வு பாடசாலை மாணவர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்