எதிர்வரும் பெரும்போகத்துடன் அரிசியில் தன்னிறைவு காணமுடியும் - மஹிந்த அமரவீர நம்பிக்கை

By T. Saranya

07 Sep, 2022 | 08:39 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

அடுத்த பெரும்போகத்தோடு அரிசியில் தன்னிறைவு காண முடியும். அதன் பின்னர் வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படாது.

அத்துடன்   சோளப் பயிர்ச்செய்கையை மேலும் ஊக்குவிப்பதன் மூலம் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலைகளை வழமைக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க முடியும் என கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 7 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற பிள்ளைகள் தாய்மாரின் மந்தபோசணை தொடர்பாக யுனிசெப் நிறுவனம் விடுத்திருக்கும் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வெறுமனே விவாதங்கள் நடத்தி உணவு நெருக்கடி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. நாம் அனைவரும் இணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும். அதற்கான பொறுப்பு பாராளுமன்றத்தில் உள்ள 225 பேருக்கும் உள்ளது. 

அதனால் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அப்போதுதான் அனைவரும் இணைந்து இத்தகைய நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும். வெளியில் இருந்து கொண்டு அரசாங்கத்தின் நல்ல செயற்பாடுகளுக்கு மட்டும் ஒத்துழைப்பு வழங்குகின்றோம் என்று கூறுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். 

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு யோசனை வழங்குவது மட்டுமின்றி அரசாங்கத்தோடு இணைந்து பொறுப்புகளை பாரமெடுத்து செய்ய வேண்டியது இன்றைய தேவையாக உள்ளது.  அப்போதுதான் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

விவசாய அமைச்சர் என்ற  வகையில் உணவு உற்பத்தி தொடர்பில் எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை நான் முறையாக மேற்கொண்டு வருகின்றேன்.

பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரும் பிரதேச செயலாளர் மட்டத்தில் அந்தந்த பகுதியில் உள்ளவர்கள் அந்த பொறுப்பை பாரமெடுத்தால் உற்பத்தி நடவடிக்கைகளை முன்னேற்ற முடியும். தத்தமது பகுதிகளில்  விவசாயம் செய்யப்படாத காணிகளில் விவசாயத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை அவ்வாறு மேற்கொள்ள முடியும். 

225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உணவு உற்பத்தி தொடர்பான பொறுப்புகளை கையளிப்பதற்கு நான் தயாராக உள்ளேன். 

அதனால் உணவு உற்பத்தி செயற்பாடுகளில் இணைந்து கொள்ள முன்வருமாறு. 225 பேருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன். மாவட்டச் செயலாளர் பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவை அதிகாரிகள் பிரிவு மட்டத்தில் குழுக்களை நியமித்து இதனை முறையாக முன் னெடுத்துச் செல்ல முடியும். 

உரம் இலவசமாக வழங்கப்பட்ட காலத்தை விட கடந்த பெரும்போகத்தில் அதிகமான விவசாயிகள் நெல் உற்பத்தியில் ஈடுபட்டனர்.

நாம் வெளிநாட்டில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பில் பேசுகின்றோமே தவிர எமது விவசாயிகள் மீது நம்பிக்கை வைத்து உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பில் பேசுவது குறைவாகவே உள்ளது.

அத்துடன் பட்டதாரிகள் பெருமளவில் தற்போது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை காண முடிகிறது. அனுராதபுரம் மாவட்டத்தில் இவ்வாறு மிளகாய் பயிர்ச் செய்கையில் பலர் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் தற்போது அரசாங்க தொழில் தமக்கு தேவையில்லை என்ற நிலைக்கு வந்துள்ளனர்.

அடுத்த பெரும்போகத்தோடு அரிசியில் தன்னிறைவு காண முடியும். அதன் பின்னர் நாம் வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை. 

அத்துடன் நாம் சோளப் பயிர்ச்செய்கையை மேலும் ஊக்குவிப்பதற்கு  நடவடிக்கை எடுத்துள்ளோம் விதைச்சோளம் தட்டுப்பாடு நிலவுவதால்  வெளிநாடுகளில் இருந்து அதனை இறக்குமதி செய்வதற்கு இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம். அது தொடர்பில் நான் ஜனாதிபதிக்கும் தெரிவித்துள்ளேன். அவ்வாறு சோளப் பயிர்ச்செய்கை சாத்தியமாகும்போது கோழி இறைச்சி, முட்டை போன்ற வற்றின் விலைகள் இயல்பாக குறைந்து விடும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையை சேர்ந்த கோடீஸ்வரர் இந்தோனேசியாவில் உயிரிழப்பு

2023-02-06 04:17:44
news-image

சமூக ஊடக செயற்பாட்டாளர் கொழும்பு விமானநிலையத்தில்...

2023-02-06 03:55:04
news-image

சிறுபான்மை பிரதிநிதிகளிடையே முக்கிய உரையாடல் அடுத்த...

2023-02-05 17:43:18
news-image

தமிழ்த் தேசியக் கட்சிகளை தனித்து செயற்பட...

2023-02-05 17:44:22
news-image

இலங்கையின் கிராமப் புற அபிவிருத்திக்கு இந்தியாவின்...

2023-02-05 17:41:37
news-image

அரசாங்கத்திடம் ஸ்திரமான பொருளாதாரக் கொள்கைகள் கிடையாது...

2023-02-05 17:32:24
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கு 10...

2023-02-05 17:35:04
news-image

அரசியலமைப்பு பேரவை மூன்றாவது தடவையாக திங்கள்...

2023-02-05 14:39:41
news-image

மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம்...

2023-02-05 18:01:18
news-image

ராஜபக்சவின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிப்போம் -...

2023-02-05 17:21:35
news-image

தேர்தலுக்கு அச்சமில்லை : தேர்தல் செலவுகளுக்கு...

2023-02-05 17:18:20
news-image

கஜமுத்துக்களை விற்க முயன்ற இளைஞன் கல்முனையில்...

2023-02-05 17:34:01