(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பிள்ளைகள் தாய்மாரின் மந்தபோசணை தொடர்பாக யுனிநெப் நிறுவனம் விடுத்திருக்கும் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது அதிகரித்துவரும் மந்தபோசணை நிலைமையை கட்டுப்படுத்த 15இலட்சம் குடும்பங்களுக்கு போஷாக்கு பொதி மாதாந்தம் வழங்கவேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்திருக்கின்றது.
சிறுவர்களின் மந்தபோசனையை கட்டுப்படுத்த நாங்கள் அனைவரும் இணைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் எமது நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் போசணை பிரிவு 2021இல் மேற்கொண்ட கணிப்பீட்டின் அடிப்படையில் குல்லமான சிறுவர்களின் வீதம் 11.5 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தெற்காசியாவில் எமது நாட்டின் நிலை நல்லதாகும். வேறு நாடுகளில் இது நூற்றுக்கு 35வீதமாக இருக்கின்றது.
அதேநேரம் 27ஆயிரம் சிறுவர்கள் பாரிய மந்தபோசனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண மந்தபோசனையால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் 2இலட்சத்தி 7ஆயிரம் பேர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த எண்ணிக்கையை நான்காக பிரித்தே ஜனாதிபதி 61ஆயிரம் குடும்பங்களுக்கு போசாக்கு பை வழங்குவதாக தெரிவித்திருக்கின்றார்.
அத்துடன் 15இலட்சம் குடும்பங்களுக்கு உணவு பாதுகாப்பு இல்லை என்றும் 29இலட்சம் குடும்பங்கள் வறுமை கோட்டின் கீழ் இருப்பதாகவும் கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை இரண்டு மடங்காக அதிகரித்து 54ஆயிரமாக அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் இதன் காரணமாக சிறுவர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்புக்கள் ஏற்பட இடமிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதேபோன்று தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக கர்ப்பணி தாய்மார் மற்றும் வயது முதிந்தவர்களின் மந்தபோசனை நிலைமை மேலும் அதிகரிக்க இடமிருக்கின்றது. புரொட்டின் மற்றும் சத்துணவு குறைபாடால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக இடமிருக்கின்றது எனவும் குறித்த கணிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
எனவே ஜனாதிபதி வரவு செலவு திட்டத்தில் முன்வைத்த 61ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொதி, 2021இல் மேற்கொண்ட கணிப்பீட்டுக்கு போதுமானதாக இருந்தாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இதுபோன்று இரண்டு மடங்கு தேவைப்படுகின்றது.
மேலும் மந்தபோசணை கணிப்பீடு மேற்கொள்ளும்போது இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைமையே தெரிவிக்கப்படுகின்றது. 2021இல் மேற்கொள்ளப்பட் கணிப்பீட்டின் தரவுகள் 2019இல் இந்த நிலைமையாகும். அந்த வகையில் யுனிசெப் அமைப்பு 2016இல் மேற்கொண்ட கணிப்பீடானது 2014இல் நாட்டின் மந்தபோசணை நிலைமையாகும்.
யுனிசெப் அறிக்கையிக் பிரகாரம் நாட்டில் பாரம் குறைந்த சிறுவர்களின் வீதம் 20.5ஆகும். அதேபோன்று குல்லமானவர்களின் சிறுவர்களின் வீதம் 17.5ஆகும். 2015இல் எமது அரசாங்கத்தில் கர்ப்பிணி தாய்மாருக்கு நூறு வீதம் திரிபோஷா வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டோம்.
அதனால் மந்தபோசணை நிலைமை குறைவடைந்தது. ஆனால் தற்போது அந்த நடவடிக்கை வீழ்ச்சியைந்திருக்கின்றது. அதன் பெறுபேறே தற்போது எமக்கு கிடைக்கின்றது. சிறுவர்களுக்கு போஷாக்கு வழங்கும் பல நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம். அந்த வேலைத்திட்டங்கள் தற்போது நிறுத்தப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் நாட்டில் தற்போது அதிகரித்துவரும் மந்தபோசணை நிலைமையை கட்டுப்படுத்த 15இலட்சம் குடும்பங்களுக்கு போஷாக்கு பொதி மாதாந்தம் வழங்கவேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்திருக்கின்றது. இதற்கு மேலதிகமாக மேலுமொரு போசாக்கு பொதி ஒன்றை கர்ப்பிணி தாய்மாருக்கு வழங்கவேண்டும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கின்றது.
எனவே சிறுவர்களின் மந்தபோசனையை கட்டுப்படுத்த நாங்கள் அனைவரும் இணைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் எமது நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோன்று கல்வி அறிவும் குறைவடையும் அபாயம் இருக்கின்றது.
இது இவ்வாறு இருக்க, நாட்டில் பாரியளவில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்து வருகின்றது. அத்தியாவசிய மருந்து பொருட்கள் வைத்தியசாலைகளில் இல்லை. அத்துடன் வைத்தியசாலைகளில் சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மாருக்கு புரோட்டின் அடங்கிய உணவே வழங்கிப்படுகின்றது.
ஆனால் தற்போது பொருளாதார பாதிப்பு காரணமாக புரோட்டின் இல்லாத உணவே அவர்களுககு வழங்கப்படுகின்றது. கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் புராேட்டின் அடங்கிய உணவுக்கு ஆதரவு வழங்குமாறு தனவந்தர்களை வைத்தியசாலை பிரதான வைத்தியர் கோரி இருக்கின்றார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM