(எம்.வை.எம்.சியாம்)
நாட்டில் தற்போது ஐஸ் போதைப்பொருள் பாவனை 225 வீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஐஸ் போதைப்பொருள் தொடர்பில் நாட்டில் உள்ள சட்டத்தை கடுமையாக்குவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்காக ஆபத்தான போதைப்பொருள் தொடர்பான தடுப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐஸ் போதைப்பொருளை கைவசம் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்வோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அதன் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
இந்த நிலையில், புதிய தடுப்பு சட்டத்திற்கு அமைவாக 5 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைவசம் வைத்திருக்கும் நபர் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக பிணை வழங்கப்படமாட்டாது.
மேலும் இது தொடர்பில் சந்தேக நபர்கள் குற்றவாளியாக அடையாளம் காணப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வழங்கப்படும்.
நாட்டில் தற்போது ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில், தேசிய ஒளடதங்கள் ஆணைக்குழுவின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் பிரங்கிக்கா அமரபந்து இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
ஐஸ் போதைப்பொருள் பாவனை 225 வீதமாக அதிகரித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் கடந்த 4 வருட காலப்பகுதியில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது
இரவு நேர கழியாட்டயங்களிலேயே அதிகளவிலான ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதன்போது 22 முதல் 26 வயதிற்கு இடைப்பட்டவர்கள் அதிகளவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வு செயற்திட்டங்கள் முன்னெடுக்கபட்டுள்ளதாகவும் அவர்களுக்கு நான்கு கட்டங்களாகவும் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் இந்த புனர்வாழ்வு வழங்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM