கொழும்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

Published By: Vishnu

07 Sep, 2022 | 12:23 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கொழும்பு- கருவாத்தோட்டம் பகுதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விஜேராம மாவத்தையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 24 வயதுடைய கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த வரவாராவர்.

கார் சாரதியின் கவனயீனம் விபத்துக்கு காரணம் என்றும்  சாரதி மதுபோதையில் இருந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-03-17 06:34:21
news-image

கிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்...

2025-03-17 05:07:05
news-image

விஜயகுமாரதுங்க உட்பட முக்கிய படுகொலை அறிக்கைகளை...

2025-03-17 04:56:54
news-image

பட்டலந்த சித்திரவதை சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சை...

2025-03-17 05:00:32
news-image

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட வேண்டும்;...

2025-03-17 04:49:16
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை : ...

2025-03-17 04:45:11
news-image

ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக்...

2025-03-16 16:20:41
news-image

அமைச்சர் நளிந்த வரலாற்றை மறந்துவிட்டார் :...

2025-03-16 20:34:58
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை :சட்டமா...

2025-03-16 17:16:42
news-image

நாடளாவிய ரீதியில் அரச தாதியர் சங்கத்தினர்;...

2025-03-16 22:15:49
news-image

அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பாதாளக்...

2025-03-16 17:16:18
news-image

வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும்...

2025-03-16 21:24:04