பெண்ணின் கண்ணீர் என்பது ஆணுக்கு வேண்டுமானால், காரியங்களை சாதித்துக்கொள்ளும் கருவி போலவும், எதிரே இருப்பவரை வீழ்த்தும் ஆயுதம் போலவும் இருக்கலாம்.
பெண்ணைப் பொறுத்தவரையில், அவளின் கண்ணீர் என்பது அவளுடைய உண்மையின் மெய்ப்பாடு. அவள் மனதின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த அவளுக்குத் தெரிந்த செயற்பாடு.
இந்த சமுதாயத்தை பொறுத்தவரை, கண்ணீர் பெண்களுக்கு ஓர் ஆயுதம் என பரவலாக கூறப்படுகிறது.
ஆனால், அந்த ஆயுதத்தை வைத்து பெண்கள் எத்தனை எதிரிகளை வீழ்த்தியிருக்கிறார்கள், எத்தனை உறவுகளை தொலைத்திருக்கிறார்கள், எத்தனை உறவுகளிடம் மண்டியிட்டு இருக்கிறார்கள் என்பதை பெண்களின் கண்ணீர் மட்டுமே சொல்லும்.
ஒரு பெண் தனது கண்ணீரின் மூலம் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்கிறாள் என்றால், அது வெறும் கண்ணீர் சார்ந்த விடயமாக இருக்காது. அவளது உணர்வு சார்ந்த விடயமாகவே இருக்கும்.
மனதுக்குள் எதையும் தேக்கி வைத்துக்கொள்ளாமல் உணர்வை கண்ணீரால் வெளியே கொட்டிவிடுவதால் தான் பெண்கள் எப்போதும் தெளிந்த மனதோடு சிந்திக்க, செயற்பட தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.
தனது கண்ணீரை யார் முன் சிந்த வேண்டும் என்பதில் கூட பெண்கள் வரையறை வைத்திருப்பார்கள். ஓர் ஆணின் முன்னால் அழக்கூடாது என தனது மனதை இறுக்கமாக்கிக் கொண்டால், அதன் பின்னர் அந்த இறுக்கம் நலிவடைவது இயலாத காரியம்.
தனது கண்ணீரின் வலிமை மற்றும் அதில் உள்ள உண்மையை ஒரு பெண் மட்டுமே நன்கறிவாள். பல நேரங்களிலும் பெண்களின் கண்ணீர் அர்த்தமற்றது என புறந்தள்ளப்படுவதுண்டு.
தான் நேசிக்கும் ஆண், அவளது உணர்வுகளோடு விளையாடுகையில், பல்வேறு கேள்விகளை உள்ளடக்கிக்கொண்டு, அவனிடம் கேள்விகள் கேட்டு தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முடியாத நிலையில், கண்ணீரிடம் அடைக்கலம் ஆகிறாள்.
உணர்வுகள் கண்ணீராய் வெளிப்பட்ட பின்னரும் கூட, கண்ணீருக்கு காரணமானவர் அவளை அவமதிக்கும்போது மௌனம் காத்து, தன்னை மூடிக்கொள்கிறாள்.
தமிழ் இலக்கிய மரபில் எட்டு மெய்ப்பாடுகள் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளன. அவை நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகியவை.
இந்த எட்டு வகையான வெளிப்பாடுகளிலும் அவள் துளியேனும் கண்ணீராகத் துளிர்த்துவிடுவாள். பெண்ணுக்கு அவளுடைய எந்த உணர்வாக இருந்தாலும், அதன் அடிப்படையான உண்மையை கண்ணீராகவே வெளிப்படுத்தத் தெரிகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM