மிளகு இட்லி

07 Sep, 2022 | 10:55 AM
image

தேவையான பொருட்கள் 

இட்லி - 10

தாளிக்க - எண்ணெய் (தேவைக்கேற்ப)

மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

நறுக்கிய வெங்காயம் - 1 கப்

நறுக்கிய தக்காளி - ½ கப்

சோயா சோஸ் - 2 டேபிள் ஸ்பூன்

சில்லி சோஸ் - சிறிதளவு

இஞ்சி, வெ.பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை 

இட்லியைத் துண்டாக்கி எண்ணெயில் பொரித்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை போட்டு வதக்கவும். இலேசாக வதங்கிய பின் இஞ்சி - வெ.பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி, உப்பு, மிளகுத்தூள், சோயா சோஸ், சில்லி சோஸ் சேர்த்து வதக்கி, பொரித்த இட்லி துண்டுகளைப் போட்டு பிரட்டி எடுக்கவும். மாலை நேரம் சாப்பிட உகந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right