கூந்தலை வளர்க்கும் மயோனைஸ்

By Devika

07 Sep, 2022 | 10:50 AM
image

கூந்தல் ஜீவனில்லாமல் முடி வளர்ச்சி­யும் நின்று போய், எப்­போதும் அது ஒரு மைனஸாக சிலருக்கு இருக்கும்.

இதனால் சிலருக்கு எலிவால் போலும், குச்சி போலும் நீட்டிக் கொண்டிருக்கும். அதனை நீக்க போதி­யளவு ஊட்டமளித்து, கூந்தல் வளர்ச்சியை தூண்ட வேண்டும். நன்றாக புரத உணவுகள் சாப்பிடுவதாலும் எண்ணெய், வெளிப்புற போஷாக்கு அளிப்பதாலும் உங்கள் கூந்தலின் அமைப்பை மாற்றலாம். 

அதில் ஒன்றுதான் நீங்கள் அறிந்திராத மயோனைஸ் குறிப்பு. மயோனைஸ் பொது­வாக உணவுகளை அலங்கரிப்பதற்காக தயா­ரிக்கப்­பட்டாலும், அதைக் கூந்தல் வளர்ச்சிக்கும் உபயோகிக்கலாம்.

உபயோகிக்கும் முறை: 

தலையை ஈரப்படுத்துங்கள். பிறகு மயோ­னைஸை தலையின் வேர்க்கால்களிலிருந்து நுனி வரை தடவுங்கள். 

மசாஜ் செய்யுங்கள். அதன் பிறகு ஒரு ஷவர் கேப்பினால் உங்கள் கூந்தலை மூடிவிடுங்கள் அல்லது ஒரு வெதுவெதுப்பான ஈர டர்க்கி துண்டால் தலைமுடியை கட்டுங்கள். 

20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை ஷெம்பூவினால் அலசவும். மாதம் ஒரு முறை செய்­தால் கூட போதுமானது. இது முடி உதிர்தலை கட்­டுப்படுத்தி, நன்கு வளரச் செய்யும். 

இது வறண்ட கூந்தலுக்கு மிகவும் நல்லது. இதிலுள்ள புரதம் மற்றும் லெசித்தின் கூந்தல் வளர்ச்சியை தூண்டும். ஈரப்பதத்தை அளிக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right