(எம்.மனோசித்ரா)
நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் ஆவோம். தற்போது ஆரம்பமாகியுள்ள நாட்டை மீட்ப்பதற்கான போராட்டத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு அனைவருக்கும் மீண்டும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐ.தே.க.வின் 76 ஆவது சம்மேளனம் இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
ஐக்கிய மக்கள் சக்தி , பொதுஜன பெரமுன, ஜே.வி.பி., ஈ.பி.டி.பி., ஐ.தே.க., தமிழ் தேசிய கூட்டமைப்பு என எந்தக் கட்சியானாலும் நாம் அனைவரும் ஒருதாய் மக்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். தற்போது முதலாவது போராட்டம் நிறைவடைந்துள்ளது. எனினும் நாட்டை மீட்பதற்கான இரண்டாவது போராட்டம் இப்போதுதான் ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டத்தில் கட்சி பேதமின்றி இணைந்து செயற்பட அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.
தற்போது என்னிடம் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமோ அல்லது பாராளுமன்றமோ இல்லை. எனவே ஏனைய அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயற்பட வேண்டிய தேவையுள்ளது. 3 வேளை உணவைப் பெற்றுக் கொள்ள முடியாமலும் , தொழிலை இழந்தும் மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். அனைவருக்கும் பதவிகளை வழங்குவதற்கு முன்னர் உள்ள ஜனாதிபதிகளைப் போன்று என்னிடம் எதுவும் இல்லை. மாறாக நாட்டு மக்களுக்கு வியர்வையையும் பாடுபடுதலையுமே என்னால் வழங்க முடியும். எனினும் இந்த வியர்வையின் மூலம் அனைவரும் இணைந்து நாட்டை மீளக் கட்டியெழுப்புவோம்.
நவீன அரசியல் மாற்றத்தைக் கோரிய இளைஞர் யுவதிகளின் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்துள்ளது. ஆனால் அவர்களது கோரிக்கை நிறைவடையவில்லை. அதனை நிறைவேற்றுவதற்கு நாம் முன்னின்று செயற்படுவோம். இளைஞர் யுவதிகள் அவர்களின் இயலுமையையும் பலத்தையும் காண்பித்துள்ளனர். எதிர்வரும் 25 ஆண்டுகளுக்குள் கடன் அற்ற அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றியமைக்க முடியும். எனினும் அந்த மாற்றத்தைப் பார்ப்பதற்கு நான் இருக்க மாட்டேன். எனவே தான் அதற்கான வழியை இளைஞர் யுவதிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளேன்.
கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு மேலதிகமாக மேலும் 3 நிதி தொடர்பான குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன. இக்குழுக்களின் ஊடாக நாட்டின் நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான சகல விடயங்களும் முன்னெடுக்கப்படும். இவை அனைத்தையும் முன்னெடுப்பதற்கு தேசிய சபை அமைக்கப்பட வேண்டும். கட்சி தலைவர்கள் அனைவரையும் இதில் உள்ளடக்க வேண்டும். இது தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவை தவிர 'உண்மைக்கான ஆணைக்குழு' நியமிக்கப்படவுள்ளது. அது தவிர 14 000 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் மக்கள் சபையை நியமித்து அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இம்முறை பெரும்போகத்திற்கு தேவையான உரம் , எரிபொருள், கிருமி நாசினி உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படும். எனவே முழுமையான அர்ப்பணிப்புடன் விவசாயத்தில் ஈடுபடுமாறு கோருகின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM