விடுதலைப் புலிகளை தோற்கடித்து வடமாகாண சபைத் தேர்தலை நடத்தி வடக்கு மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக் கொடுக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்தால் வரவேற்கப்படவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறினார். 

ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று பிற்பகல் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரியர் எட்மிரல் மொஹான் விஜேவிக்ரம மற்றும் வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் இணைந்து எழுதியிருந்த "குழப்பநிலை மற்றும் ஸ்திரத்தன்மை" என்ற நூலின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.