தென் கொரியாவை நேற்று திங்கட்கிழமை பின்னிரவு தாக்கிய ஹின்னாம்னர் சூறாவளி காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
மணிக்கு சுமார் 54 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்த சூறாவளியால் தென் கிழக்கு நகரான உல்ஸானிலுள்ள பல பிராந்தியங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் பொஹாங் பிராந்தியத்திலுள்ள உருக்குத் தொழிற்சாலையில் பாரிய தீ அனர்த்தம் இடம்பெற்றுள்ள நிலையில் இதற்கும் இந்த சூறாவளிக்கும் தொடர்பு உள்ளதா என்பது அறியப்படவில்லை. சூறாவளியால் 66,000 வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சூறாவளியால் அயல்நாடான வட கொரியாவிலும் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் அனர்த்தத்தைத் தடுப்பதற்கான பணிகள் மற்றும் தென் கொரிய எல்லையிலுள்ள நீர்த்தேக்கமொன்றிலிருந்து நீரை விடுவிப்பது என்பன குறித்துக் கலந்துரையாட இரு நாட்கள் கூட்டமொன்றைக் கூட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM