(எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
மந்தபோசனை நிலையில் இலங்கை உலகில் 6ஆவது இடத்தில் இருக்கின்றது. ஆனால் இலங்கையில் மலையகம் முதலாவது இடத்தில் இருக்கின்றது.
அந்தளவுக்கு மலையக மக்கள் சத்துணவு திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் என எதிர்க்கட்சி உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற பிள்ளைகள் தாய்மாரின் மந்தபோசணை தொடர்பாக யுனிநெப் நிறுவனம் விடுத்திருக்கும் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டு மக்கள் மூன்றுவேளை உணவை பெற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு வாழ்க்கைச்செலவு அதிகரித்துள்ள நிலையில் மக்களின் புரதம் மற்றும் சத்துணவு சம்பந்தபமாக பேசப்படுகின்றது.
வாழ்க்கைசெலவு அதிகரித்துள்ளதால் மலையகத்தில் பாடசாலைகளில் சத்துணவு வழங்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
அதனால் சத்துணவும் இல்லை. பாேஷாக்கும் இல்லாத நிலையிலேயே மலையக சமூகம் இருந்துவருகின்றது. அதேபோன்று பெருந்தோட்டங்களில் கம்பனிகளின் அடாவடி நிர்வாகத்தினால் அங்கு கர்ப்பிணி பெண்கள் மிக மோசமான வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். 2கிலாே கோதுமை மா வழங்கி, அதனை கரைத்துக்குடித்துவிட்டால் சத்துணவு,புரதம் கிடைத்துவிடும் என அவர்கள் நினைக்கின்றனர்.
அத்துடன் இன்று சாதாரண குடும்பம் ஒன்றின் நாள் ஒன்றின் வாழ்க்கைச்செலவு 3660ரூபா என பேராதனை பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கின்றது. ஆனால் மலையத்தில் ஒருகிலாே கோதுமை மா 440ரூபாவுக்கே விற்பனை செய்யப்படுகின்றது. இவ்வாறான நிலையில் மலையக மக்கள் எவ்வாறு வாழ்வது? அதனால் பெருந்தோட்ட மக்களுக்கு ஒருநாளைக்கு 3250ரூபா வழங்கவேண்டும் என பெருந்தோட்ட கம்பனிகளுக்கு அரசாங்கம் உத்தரவிடவேண்டும்,.
அதேபோன்று பெந்தோட்ட பிரதேசங்களில் மாலை 6மணிக்கு பிறகு வைத்தியசாலைகள் மூடப்படுகின்றன. அப்படியாயின் கர்ப்பிணி பெண்களுக்கு எவ்வாறு சுகாதார சேவையை வழங்குவது?. மலையகத்தில் 70க்கும் 80க்கும்வீதமான பெண்கள் போஷாக்கு குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பாரிய நிலைமை. அதனால் மலையத்தில் இந்த நிலைமையை போக்குவதற்கு அரசாங்கம் முறையான வேலைத்திட்டம் ஒன்றை அமைக்கவேண்டும். மந்தபோசன நிலைமை இல்லாவிட்டால் மலையகத்தில் இருந்து அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படுவார்கள்.
பெருந்தோட்ட மக்களின் சம்பளம் ஆயிரம் ரூபா. ஆனால் ஒருகிலாே கோதுமை மா 440ரூபா. இவ்வாறு இருக்கையில் எப்படி அவர்கள் போஷாக்கு உணவு பெற்றுக்கொள்ள முடியும். அதனால் மலையத்தில் மந்தபோசனத்தை இல்லாமலாக்க பிரத்தியேக வேலைத்திட்டம் அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM