சமூக பாதுகாப்பு உதவு தொகை அறவீட்டுச் சட்டமுலத் திருத்தத்திற்கு மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பு  

Published By: Digital Desk 4

06 Sep, 2022 | 08:25 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

சமூக பாதுகாப்பு உதவு தொகை அறவீட்டுச் சட்டமுலம் திருத்தம் செய்யப்பட்டால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மேலும் நெருக்கடிக்குள்ளாகும் நிலை ஏற்படும், ஆகவே இச்சட்ட மூல திருத்தத்திற்கு நாங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.

இச்சட்ட மூலம் தொடர்பில் எவ்வித தெளிவுப்படுத்தலையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவின் கருத்து ஏற்றுக்கொள்ள கூடியது இச்சட்ட மூலம் மீதான விவாதம் அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

சமூக பாதுகாப்பு உதவு தொகை அறவீட்டுச் சட்டமூலம் தொடர்பில் எதிர்தரப்பினர் விவாதத்தை கோரியதை தொடர்ந்து அச்சட்டமூலம் மீதான விவாதத்தை நாளைமறுதினம் நடத்த சபாநாயகர் இணக்கம் தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை சமூக பாதுகாப்பு உதவு தொகை அறவீட்டுச் சட்டமூலத்தை வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்திருந்தமைக்கு எதிர்தரப்பினர் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இச்சட்டமூலம் தொடர்பில் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டதாவது,

சமூக பாதுகாப்பு உதவு தொகை அறவீட்டுச் சட்டமூலத்தை திருத்தம் செய்வதற்கான திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளதை நாங்கள் அறியவில்லை.நிதி தொடர்பான தெரிவு குழுவிற்கு இச்சட்ட மூலம் கொண்டு வரப்படவில்லை.முன்னாள் நிதியமைச்சர் 

பஷில் ராஜபக்ஷவே இந்த சட்டமூலத்தை முதலாவதாக கொண்டு வந்தார்.

கடந்த ஆறு மாத காலமாக பாராளுமன்றத்திற்கு கொண்டு வரமுடியாத நிலையில் இருந்த சமூக பாதுகாப்பு உதவு தொகை அறவீட்டுச் சட்டமூலத்தை அரசாங்கம் தற்போது கொண்டு வந்துள்ளது.இந்த வரிச்சட்டததை திருத்தம் செய்து வரியை அதிகரித்தால் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் மேலும் பாதிக்கப்படுவார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சமூக பாதுகாப்பு உதவு தொகை தொடர்பில் சபைக்கு எவ்வித தெளிவுப்படுத்தலும் முன்வைக்கப்படவில்லை.பொதுஜன பெரமுனவின் 

அரசாங்கம் வரி குறைப்பு செய்ததால் தேசிய வருமானம் வீழ்ச்சியடைந்தது.இந்த சட்டமூலத்திலும் எவ்வித தெளிவுப்படுத்தலும் கிடையாது. சொத்து வியாபார வரி பிரிவு இச்சட்ட மூலத்தில் நீக்கப்பட்டுள்ளது.

தெல்கந்த சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்பவர்கள் சொத்து வியாபாரத்தில் ஈடுப்படுவதில்லை.சாதாரன மக்களுக்கு பயன் சேர்க்கும் வகையிலான வரி திருத்தங்களை மேற்கொள்ளுங்கள் என்றார்.

இதன்போது குறுக்கிட்டு உரையாற்றிய அனுர குமார திஸாநாயக்க சமூக பாதுகாப்பு உதவுத் தொகை அறவீட்டுச் சட்டத்தை திருத்தம் செய்வதாக கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கவில்லை.ஆகவே இச்சட்டமூலத்தின் மீதான விவாதம் அவசியம் என்றார்.இதனை தொடர்ந்து சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூல திருத்தம் மீதான விவாதத்தை நடத்த சபாநாயகர் இணக்கம் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58