ராஜபக்ஷர்களின் கொள்கையை செயற்படுத்தினால் மந்தபோசனை தொடரும் - ரோஹினி கவிரத்ன   

Published By: Vishnu

06 Sep, 2022 | 08:12 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

வறுமை கோட்டில் உள்ள 61 ஆயிரம் குடும்பங்களுக்கு பத்தாயிரம் நிவாரண தொகை வழங்கப்படுமாயின் ஒரு கிராம சேவகர் பிரிவில் நான்கு குடும்பங்களுக்கு மாத்திரமே நிவாரணம் வழங்க முடியும். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் தவறான விவசாய கொள்கையினால் இலங்கை ஆபிரிக்க நாடுகளை விடவும்  உணவு பாதுகாப்பு தொடர்பில் சவால்களை எதிர்கொண்டுள்ளது.சீன உர கப்பலுக்கு செலுத்திய நிதியை ராஜபக்ஷர்களிடமிருந்த அறவிட வேண்டும்.

ராஜபக்ஷர்களின் கொள்கையை செயற்படுத்தினால் நாட்டில் மந்த போசனை நிலைமையே தொடரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார.

சபாநாயகர் தலைமையில் 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடிய போது பிள்ளைகள் மற்றும் தாய்மாரின் மந்த போசனை தொடர்பில் யுனிசெப் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் கூறுகையில் 

பூகோள மட்டத்திலான  மந்தபோசனை தரப்படுத்தலில் ஐந்து வயதிற்கு குறைவான பிள்ளைகளின் வயதுக்கேற்ற உடல் நிறை குறைப்பாடு காணப்படுவதால் பிள்ளைகள் மந்த போசனை அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 6ஆவது இடத்திலும் , தென்னாசியாவில் தீவிரமடைந்துள்ள மந்த போசனைக்கு முகம் கொடுத்துள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 2ஆவது இடத்திலும்  இருப்பதாக  யுனிசெப் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அத்தியாவசிய உணவு பற்றாக்குறை,உணவு பொருட்களின் விலையேற்றம் ஆகிய காரணிகள் இதற்கு பிரதான காரணியாக உள்ளன.5 வயதிற்கு குறைந்த பிள்ளைகள் மிக மோசமான நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளார்கள்.வயதிற்கேற்ப உயரம்,நிறையின்மை பிள்ளைகளின் போசனை மட்டத்தில் தாக்கம் செலுத்தியுள்ளது.இந்நிலைமை தொடர்ந்தால் பிள்ளைகளின் ஆரோக்கியமும்,கல்வியும் நாட்டின் எதிர்காலமும் முழுமையாக இல்லாமல் போகும்.

ஆகவே பிள்ளைகளின் போசனை மட்டம் குறித்து விசேட அவதானம் செலுத்தி,இந்த இக்கட்டான நிலையில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.அத்துடன் யுனிசெப் நிறுவனத்தின் அறிக்கையினையும் சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.பிள்ளைகளின் மந்தபோhசனை தொடர்பில் சபையில் விவாதம் இடம்பெறும் வேளையில் நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 ஆயிரத்திற்கும் அதிகமான பிள்ளைகள் மந்த போசனையினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதில் 27ஆயிரம் பிள்ளைகள் 5 வயதிற்கு குறைவானவர்களாக காணப்படுவதுடன்,அவர்களின் மந்த போசனை மட்டம் தீவிரமடைந்த நிலையில் காணப்படுகிறது.நாட்டில் மொத்த சனதொகையில் சுமார் 51 இலட்சம் பேருக்கு மனிதாபிமான தேவைகளை வழங்குவது அவசியமாகவுள்ளது.

அத்துடன் 49 இலட்சம் பேரின் உணவு பாதுகாப்பு சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. மீன்,முட்டை,இறைச்சி ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான பிள்ளைகளுக்கு சத்துணவு கிடைப்பதில்லை.நாட்டின் பணவீக்கம் கடந்த ஒரு மாத காலத்திற்குள் மாத்திரம் 3 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது.அதேபோல் உணவு பாதுகாப்பும் சடுதியாக அதிகரித்துள்ளது.வரி அதிகரிப்பினால் இனிவரும் காலங்களினால் அதிகரிக்க கூடும்.

அடிப்படை தேவைகளில் ஒன்றாக காணப்படும் உணவு இன்று இலங்கை மக்களுக்கு இல்லாமல் போயுள்ளது.பிள்ளைகளின் குழந்தை பருவம் உணவு பற்றாக்குறையினால் பாதிக்கப்படுகிறது.மறுபுறும் தாய்மாரின் மந்த போசனையும் தீவிரமடைந்துள்ளது.இலங்கையின் உணவு பாதுகாப்பு தொடர்பில் சர்வதேச நிறுவனங்களின் தரப்படுத்தல்கள் அனைத்தும் நாட்டின் உணவு பாதுகாப்பின் பலவீனத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.

நாட்டின் எதிர்காலம் குறித்து அச்சம் கொள்ள வேண்டியுள்ளது.கர்ப்பிணி தாய்மார்களின் போசனை மட்டத்திலும் ராஜபக்ஷர்கள் கொள்கையடித்துள்ளார்கள்.விவசாய துறையின் கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தியதால் நாட்டின் உணவு பாதுகாப்பு முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

உணவு பொருட்களின் விலையேற்றத்தினால் நாட்டு மக்களின் போசனை மட்டம் குறைவடைந்துள்ளது.அனைத்து போசனைகளும் அடங்கிய ஒரு கோப்பை உணவை பெற்றுக்கொள்ள 2019ஆம் ஆண்டு 1100 ரூபா செலிவிட வேண்டியிருந்தது,தற்போது 2300 ரூபா செலவிட வேண்டியுள்ளது.ஆனால் வருமானம் அதிகரிக்கப்படவில்லை.

அரசாங்கம் சமர்ப்பித்துள்ள இடைக்கால வரவு செலவு திட்டத்தில் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படவில்லை.மாறாக வரி அதிகரித்து மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் முன்மொழிவுகள் மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளன.முன்பள்ளி பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட பகலுணவு திட்டமும் இழுபறி நிலையில் உள்ளது.மறுபுறம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட திரிபோஷாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் உணவு பாதுகாப்பு மற்றும் மக்களின் ஆரோக்கிய நிலை ஆபிரிக்க நாடுகளை காட்டிலும் பின்னோக்கி சென்றுள்ளது.யுத்த காலத்திலும் கூட இவ்வாறான நிலை காணப்படவில்லை.இரசாயன உரம் தடை செய்யப்பட்டதால் நாட்டின் உணவு உற்பத்தி 40 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது. இரசாயன உரம் தடை செய்யப்பட்டதால் நாட்டின் விவசாய துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

தேசிய விவசாயத்துறையை வீழ்ச்சியடைய செய்து எவ்வாறு நாட்டு மக்களின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.குடும்ப வைத்திய சேவையாளர்களினால் தான் பிள்ளைகளின் போசனை மட்டத்தை பாதுகாக்க அவதானம் செலுத்தியுள்ளார்கள்.உணவு பாதுகாப்பு மற்றும் போசனை மட்டம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

வறுமை கோட்டின் கீழ் உள்ள 61 குடும்பங்களுக்கு மாதாந்தம் 10000 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் 14202 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன.ஜனாதிபதி குறிப்பிட்டதை போன்று 61 ஆயிரம் குடும்பங்களுக்கு 10000 ஆயிரம் ரூபா அடிப்படையில் நிவாரணம் வழங்குதாயின் ஒரு கிராம சேவகர் பிரிவில் 4 குடும்பங்களுக்கு மாத்திரமே நிவாரணம் வழங்க முடியும்,ஆகவே எவ்வாறு நிவாரணம் வழங்கப்படும் என்பதை அரசாங்கம் குறிப்பிட வேண்டும்.நாட்டு மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மலையக மக்களின் நிலைமை கவலைக்குரியது.1000 நாளாந்த சம்பளம் என குறிப்பிட்ட வாக்குறுதி பொய்யாக்கப்பட்டுள்ளது.வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் மலையக மக்கள் மிக மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளார்கள்.நாட்டில் உணவு உள்ளது ஆனால் அதனை பெற்றுக்கொள்ள மக்களிடம் பணமில்லை.குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் மாத்திரமல்ல, வசதியுள்ள குடும்பங்களில் உள்ள பிள்ளைகளும் மந்த போசனையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.உணவு விநியோகம் முறையாக வழிநடத்தப்பட வேண்டும்.நாட்டு மக்கள் உணவு பாதுகாப்பு குறித்து விசேட அவதானம் செலுத்த வேண்டும்.விவசாயத்துறையை மேம்படுத்த வேண்டுமாயின் விவசாய நடவடிக்கைகள் விரிவுப்படுத்தப்பட வேண்டும்.

நாட்டின் எதிர்காலம் குறித்து சபையில் கேள்வியெழுப்பும் போது பதிலளிக்க பிரதமரும்,ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் எவரும் சபையில் இல்லை.உர கொள்கையினை மாற்றியமைக்கும் கொண்டுவந்த ஜனாதிபதி,யோசனையை அமைச்சரவையை சமர்ப்பித்த அமைச்சர்,மற்றும் விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினரிடமிருந்து சீன கப்பலுக்காக செலவிட்ட நிதியை அறவிட வேண்டும்.ராஜபக்ஷர்களின் யோசனைக்கமைய செயற்பட்டபால் நாட்டில் மந்த போசனையே நிலவும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49