எரிபொருள் விலை மனுகோரலுக்கமைய எரிபொருளை இறக்குமதி செய்ய ரஷ்ய நிறுவனங்கள் உடன்படவில்லை அமைச்சர் கஞ்சன விஜேசேகர சபையில் தகவல்

By Vishnu

06 Sep, 2022 | 08:07 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என குறிப்பிடுவது அடிப்படையற்றதாகும்.

எரிபொருள் விலை மனுகோரலுக்கமைய எரிபொருளை இறக்குமதி செய்ய ரஷ்ய நிறுவனங்கள் உடன்படவில்லை, பெறுகை கொள்கைக்கு அமைய எம்மால் எரிபொருள் இறக்குமதி செய்ய முடியாது.

எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் எரிபொருள் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வு கூடியபோது எரிபொருள் தொடர்பில் ஆளும் தரப்பின் உறுப்பினர் ஜகத் குமார முன்வைத்த வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்  கூறுகையில், 

எரிபொருள் கொள்வனவின் போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. வெளிநாட்டு கையிருப்பு வீழ்ச்சி, கடன் பற்று  பத்திர விநியோகம் தாமதப்படுத்தல் மற்றும் எரிபொருள் இறக்குமதியாளர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை செலுத்தல் தாமதப்படுத்தப்பட்டுள்ளதால் எரிபொருள் இறக்குமதியின் போது மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு குறைந்த விலையில் எரிபொருளை விநியோகிக்க முடியும் என இலங்கையில் உள்ள ரஷ்ய தூதுவராயலம் அறிக்கை வெளியிடவில்லை.

இவ்விடயம் குறித்து அரசியல் தரப்பில் குறிப்பிடப்பட்டதுடன்,பிரதான பத்திரிகை ஓன்று செய்தி வெளியிட்டிருந்தது.

வெளியிடப்பட்ட செய்தி தவறு என அரசாங்க தரப்பில் குறிப்பிடப்பட்டதை தொடர்ந்து குறித்த பத்திரிகை நிறுவனம் அந்த  செய்தியை திருத்தம் செய்து உண்மையான செய்தியை பிரசுரித்தது.

எரிபொருள் இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் ரஸ்யாவிடம் ஆலோசனை கோரியுள்ளது. ரஷ்யா அரசாங்கங்களுக்கிடையில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் பேச்சுவார்த்தையை முன்னெடுக்காது, எரிபொருள் தொடர்பான பேச்சுவார்த்தை நிறுவன மட்டத்தில் முன்னெடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய ரஸ்யாவின் தனியார் எரிபொருள் நிறுவனங்கள் தொடர்பான விபரங்களை கொழும்பில் உள்ள ரஸ்யா தூதரகம் வழங்கியுள்ளது.

அந்த பெயர் பட்டியலுக்கு அமைய விண்ணப்பத்தை முன்வைத்தோம்.முன் கட்டணம் செலுத்தினால் மாத்திரமே எரிபொருள் இறக்குமதி செய்ய முடியும் என குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் தற்போது செயற்பாட்டில் உள்ள எரிபொருள் விலை மனுகோரலுக்கமைய விநியோகத்திற்கு உடன்பட முடியாது என அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் மாத்திரம் அவர்களுடன் எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும்.இதில் சாதக மற்றும் பாதக தன்மை காணப்படுகிறது.

எரிபொருள் இறக்குமதியின் போது பின்பற்றப்படும் பெறுகைக்கு அப்பாற்பட்டு செயற்பட முடியாது. எரிபொருள் விநியோகத்தை முறையாக முன்னெடுக்கவே சூத்திரம் அமுல்படுத்தப்பட்டது. கடந்த மாதம் மாத்திரம் விலை சூத்திரத்திற்கமைய மண்ணெண்ணெய் விலை திருத்தம் செய்யப்பட்டது.நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கியின் பரிந்துரைக்கமையவே  எரிபொருள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.

உலக சந்தையின் விலைகுறைப்பிற்கமைய எரிபொருள் விலையை உடன் குறைக்க முடியாது.இறக்குமதி செய்யப்படும் விநியோகத்தில் தற்போது சற்று இலாபம் கிடைக்கப் பெற்றுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் எரிபொருள் தொடர்பில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச செலவுகளை 6 வீதத்தால் குறைப்பதற்கான...

2023-02-02 15:27:21
news-image

விமல், டலஸ், பீரிஸ் அணியினருக்கு எதிராக...

2023-02-02 12:49:22
news-image

தேர்தல் செலவுகளுக்கு கட்டுப்பணம் பயன்படுத்தப்படுகிறதா ?...

2023-02-02 15:25:08
news-image

இலங்கை வருகிறார் நேபாள வெளிவிவகார அமைச்சர்

2023-02-02 15:42:37
news-image

காணாமல்போன வெல்லம்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் நிர்வாணத்துடன்...

2023-02-02 17:03:36
news-image

26 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ்...

2023-02-02 16:23:13
news-image

கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவோர் மக்களையும் பிளவுபடுத்தி...

2023-02-02 16:59:48
news-image

கம்பளை - நாவலப்பிட்டி பிரதான வீதியில்...

2023-02-02 16:57:03
news-image

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு...

2023-02-02 15:34:04
news-image

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

2023-02-02 16:53:42
news-image

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணயநிதியத்திற்கு உத்தரவாதங்களை...

2023-02-02 15:56:36
news-image

கடவுளிடமே மன்னிப்புக் கோரினேன்; கத்தோலிக்க தேவாலயத்திடம்...

2023-02-02 15:45:01