சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை சபைக்கு சமர்ப்பிக்கவும் ; எதிர்க்கட்சி கோரிக்கை

Published By: Digital Desk 3

06 Sep, 2022 | 01:10 PM
image

(எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள்  மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சிகள் இன்று (06) கோரிக்கை விடுத்தன.

பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத்தொடர்ந்து, விசேட கூற்றொன்றை முன்வைப்பதற்காக எழுந்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்யில் இருக்கும்போது கடந்த மார்ச் 23ஆம் திகதி இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டிலும் அதேபோன்று கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி பாராளுமன்றத்திலும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்  மட்டத்திலும் எட்டப்பட்ட  உடன்படிக்கையை உடனடியாக பாராளுமன்றத்துக்கு சமர்க்கவேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார். அரசியலமைப்பின் பிரகாரம் நிதி அதிகாரம்  பாராளுமன்றத்திற்கே   இருக்கின்றது. அதனால்தான் அந்த கோரிக்கையை விடுத்திருந்தார்.

எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அந்த முன்மாதிரியை அடிப்படையாகக்கொண்டு, சர்வதேச நாணய நிதியத்தின்  அதிகாரிகள்  மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை சபைக்கு சமர்க்குமாறும் அதனை வெளிப்படுத்துமாறும்  கேட்டுக்கொள்கின்றேன். 

அதன் ஊடாக குறித்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் தொடர்பாக எமக்கும் புரிந்துகொள்ளலாம். அதேநேரம் அந்த உடன்படிக்கையை ஆராய்ந்து, நாட்டுக்கு மிகவும் நல்ல விடயங்கள் என்ன என்பது தொடர்பில் எமது நிலைப்பாட்டையும் தெரிவிக்க முடியும்.அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் உடன்படிக்கையை நாளைய தினமே சபைக்கு  சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷடி சில்வா குறிப்பிடுகையில்,

சர்வதேச நாணய நிதிய ஊழியர் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை பாராளுமன்ற்ததுக்கு சமர்க்க முடியாமல்போகும் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்திருந்தார். பாராளுமன்றத்துக்கே நிதி தொடர்பான அதிகாரம் இருக்கின்றது. 

அதனால் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில் அரசாங்கம் சர்வதேச நாயண நிதியங்களுடன் ஒப்பந்தங்களை செய்யும்போது அதுதொடர்பில் பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்வது அவசியமாகும். 

உடன்படிக்கையை முழுமையாக சபைக்கு சமர்ப்பிக்க முடியாமல் இருக்கலாம். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். என்றாலும் இதன் வரைபையாவது நாங்கள் தெரிந்துகொண்டால்தான் எமக்கும் ஒப்பந்தம் தொடர்பில் புரிந்துகொள்ளலாம்.

அத்துடன் இந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு பூரண ஆதரவை வழங்குவதாக நாங்கள் தெரிவித்திருக்கின்றோம். அதற்காக எதுவும் தெரியாமல் ஆதரவளிக்க முடியாது தானே? கிணற்றில் பாயச் சொன்னால் அவ்வாறே பாய முடியாது. அதனால் ஒப்பந்தத்தில் இருக்கும் விடயங்களை நாங்கள் அறிந்துகொண்டால்தான் நாட்டு மக்களுக்கும் அதுதொடர்பில் எமக்கு தெளிவுபடுத்தலாம்.

அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட ஒப்பந்தம் தொடர்பில் சபையில் கேட்ட கேள்விக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,  பிரதமராக இருந்து பதிலளிக்கையில், ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் அதுதொடர்பில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்திருந்தார் என்ற செய்தி ஹன்சாட்டில் பதிவாகி இருக்கின்றது. அதனால் இந்த ஒப்பந்தத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க முடியாது என அதிகாரிகளுக்கு தெரிவிக்க முடியாது என்றார்.

இதன்போது எழுந்த ஷரித்த ஹேரத் தெரிவிக்கையில், நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கு இருக்கின்றது. அதனால் நிதி தொடர்பான தீர்மானங்கள் அரச நிதி குழுவில் கலந்துரையாடப்பட்டு அனுமதிக்கப்படவேண்டும். அதனால் இந்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் மட்ட ஒப்பந்தத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவேண்டும் என்றார்.

இறுதியில் இதற்கு சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த பதிலளிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின்அதிகாரிகள் மட்ட உடன்படிக்கையை சபைக்கு சமர்ப்பிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவுறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19