மீன்பிடி படகில் கனடா செல்ல திட்டமிட்டிருந்த 11 இலங்கையர்கள் நேற்று (05) கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு காவல்துறையின் கியூ பிரிவு அளித்த தகவலின் பேரில் தெற்கு கேரளாவில் கொல்லத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் சுற்றுலா விசாவில் தமிழகம் வந்த இரண்டு இலங்கை பிரஜைகள் காணாமல் போயுள்ளார்கள். க்யூ பிரிவு (சிஐடி பிரிவு) அவர்களின் தொலைபேசி சிக்னல்களைப் பின்பற்றி கொல்லத்தில் அவர்களைக் கண்டுபிடித்துள்ளனர். தேடுதலுக்குப் பிறகு, தமிழ்நாட்டிலிருந்து காணாமல் போன இருவர் உட்பட 11 பேரை பொலிஸார் கைது செய்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒன்பது பேர் அகதிகளாக இந்தியாவிற்குள் நுழைந்து தென் தமிழகத்தின் ராமநாதபுரத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில் தங்கவைக்கப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் கேரள பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
விசாரணையின் போது, அவர்கள் தலா 2.5 இலட்சம் ரூபாயை கொழும்பில் உள்ள லக்மனா என்ற ஏஜென்டிடம் கொடுத்து, இந்தியாவின் தெற்கு கடற்கரையில் இருந்து கப்பல் மூலம் கனடாவுக்குப் பயணம் செய்வதை உறுதி செய்ததாகக் கூறியதாகக் கூறப்படுகிறது.
அவர்களிடம் விசாரணை நடத்த தமிழ்நாடு கியூ பிரிவு குழுவும் கேரளா சென்றுள்ளது. “கைது செய்யப்பட்ட சில உள்ளூர் உதவிகள் கிடைத்ததால் மேலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. இது குறித்து எங்களிடம் சில தடயங்கள் உள்ளன” என்று கொல்லம் பொலிஸ் கமிஷனர் மெரின் ஜோசப் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM