குழந்தையாக இருந்தபோது பிடிக்கப்பட்ட நிர்வாண புகைப்படத்துக்காக இழப்பீடு கோரிய இளைஞன்

Published By: Vishnu

06 Sep, 2022 | 03:42 PM
image

31 வரு­டங்­க­ளுக்கு முன்னர் வெளி­யான பாடல் அல்­ப­மொன்றின் அட்­டையில் தனது அனு­ம­தி­யின்றி தனது நிர்­வாண புகைப்­படம் வெளி­யி­டப்­பட்­ட­தாகக் கூறி ஓர் இளைஞன் தாக்கல் செய்த மனுவை அமெ­ரிக்க நீதி­மன்­ற­மொன்று நிரா­க­ரித்­துள்­ளது.

அமெ­ரிக்­காவின் பிர­பல இசைக்­கு­ழுக்­களில் ஒன்­றாக விளங்­கிய, நிர்­வாணா இசைக்­கு­வினால் 1991 ஆம் ஆண்டு 'நெவர்மைண்ட்' எனும் இசை அல்பம் வெளி­யி­டப்­பட்­டது. 

இதற்­கான அட்­டைப்­ப­ட­மாக, தூண்­டிலில் மாட்டப்­பட்ட டொலர் நாண­யத்தாள் ஒன்றை நோக்கி குழந்­தை­யொன்று நீந்தும் படம் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. 

இந்­நி­லையில், ஸ்பென்சர் எல்டன் எனும் இளைஞன், நிர்­வாணா இசைக்­குழு தொடர்­பான பிர­மு­கர்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தொடுத்­தி­ருந்தார். 

தான் நிர்­வா­ண­மாக காணப்­படும் புகைப்­படம் தனது அனு­ம­தி­யின்றி வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தா­கவும், இது சிறுவர் பாலியல் படங்­க­ளுக்கு இணை­யா­னது எனவும் ஸ்பென்சர் எல்டன் கூறினார்.  இப்­பு­கைப்­ப­டத்­தினால் தனது வாழ்க்­கையில் பாதிப்­புகள் ஏற்­பட்­ட­தாக அவர் தெரி­வித்­தி­ருந்தார். 

ஏற்­கெ­னவே 3 தட­வைகள் எல்டன் தாக்கல் செய்த மனுக்­களை நீதின்­றங்கள் நிரா­க­ரித்­தி­ருந்­தன. 

அதை­ய­டுத்து, லொஸ் ஏஞ்சல்ஸ் நக­ரி­லுள்ள நீதி­மன்­ற­மொன்றில் 4 ஆவது தட­வை­யாக எல்டன் வழக்குத் தொடுத்தார். 

இப்­ப­டத்தை வெளி­யிட்­ட­மைக்­காக 150,000 டொலர் நஷ்ட ஈட்டை தான் எதிர்­பார்ப்­ப­தாக அவர் தெரி­வித்­தி­ருந்தார். 

மேற்­படி படத்தை பிடித்த புகைப்­படக் கலைஞர்,  கேர்க் வெட்டில், முன்னாள் நிர்­வாணா இசைக்­குழு அங்­கத்­த­வர்கள் டேவ் குரோஹ்ல், கிறிஸ்ட் நோவோ­செலிக், பாடகர் கர்ட் கோபைனின் விதவை மனை­வி­யான கோர்ட்னி லவ் முத­லானோர் இம்­மனுவில் பிர­தி­வா­தி­க­ளாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தனர்.

எனினும், இவ்­வ­ழக்கை தொடுப்­ப­தற்­காக காலம் கடந்­து­விட்­ட­தாக  நீதி­பதி பெர்­னாண்டோ ஒல்குய்ன் தெரி­வித்தார். 

அத்­துடன், இது தொடர்­பாக எல்டன் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்ய முடி­யாது எனவும் நீதி­பதி அறி­வித்­துள்ளார். 

கலி­போர்­னியா மாநி­லத்­தி­லுள்ள நீச்சல் தடா­க­மொன்றில் மேற்­படி புகைப்­ப­டத்தைப் பிடிப்­ப­தற்கு, எல்­டனின் பெற்­றோ­ருக்கு நிர்­வாணா இசைக்­கு­ழு­வினர் 200 டொலர்­களை வழங்­கி­ய­தா­கவும், குறித்த புகைப்­ப­டக்­க­லைஞர், அக்­கு­டும்­பத்­தி­னரின் நண்பர் எனவும் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

2003 ஆம் ஆண்டில் அப்­போது 12 வயது சிறு­வ­னாக இருந்த எல்டன், குறித்த பாடல் அல்­பத்­துக்­கான தனது பங்­க­ளிப்­புக்­காக தான் ஒரு தொகை பணத்தை பெறு­வ­தற்கு எதிர்­பார்ப்­ப­தாக நேர்­காணல் ஒன்றில் தெரி­வித்­தி­ருந்தார்.

2016 ஆம் ஆண்டு, அந்த அல்­பத்தின் 25 ஆவது ஆண்டு நிறை­வை­யொட்டி, தனது உடலில் அல்­பத்தின் பெயரை டாட்­டூ­வாக வரைந்து கொண்­ட­துடன், குறித்த புகைப்­படக் காட்­சியை மீண்டும் படமாக்கியமை குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கின் பிரதிவாதிகளின் சட்டத்தரணி வாதாடுகையில், 'நிர்வாணா குழந்தையாக' விளங்குவதில் எல்டன் மகிழ்ச்சிடைந்திருந்தார் எனவும், அவர் வளர்ந்தபின் அப்புகைப்படக் காட்சியை மீண்டும் உருவாக்கினார் எனவும் கூறியிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வியட்நாமில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர்...

2025-02-17 17:45:07
news-image

அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை...

2025-02-17 12:46:28
news-image

உக்ரைனிற்கு பிரிட்டிஸ் படையினரை அனுப்பதயார் -...

2025-02-17 10:38:31
news-image

ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் - உக்ரைன்...

2025-02-16 13:43:37
news-image

ஐரோப்பாவை தவிர்த்துவிட்டு உக்ரைன் குறித்து அமெரிக்க...

2025-02-16 13:41:32
news-image

ஆஸ்திரியாவில் கத்திக்குத்து தாக்குதல் - 14...

2025-02-16 13:35:43
news-image

உக்ரைன் குறித்து ரஸ்யாவுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில்...

2025-02-16 13:17:18
news-image

மோடி குறித்து கார்ட்டூன்; விகடன் இணையதளம்...

2025-02-16 12:06:42
news-image

80 வருடங்களிற்கு முன்னர் தாய்லாந்திலிருந்து மியன்மாருக்கு...

2025-02-16 11:18:34
news-image

டெல்லி புகையிரத நிலையத்தில் கூட்ட நெரிசலில்...

2025-02-16 07:20:57
news-image

பாப்பரசரின் உடல்நிலை குறித்து வத்திக்கானின் அறிவிப்பு

2025-02-15 13:04:33
news-image

படகுடன் மகனை விழுங்கிய திமிங்கிலம் -...

2025-02-14 17:35:40