கனடா தொடர் கத்திக்குத்து தாக்குதல்- சகோதரர்களான சந்தேகநபர்களில் ஒருவர் சடலமாக மீட்பு

Published By: Rajeeban

06 Sep, 2022 | 11:50 AM
image

கனடாவில் சஸ்கட்செவனில் தொடர் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டு பலரை கொலை செய்த சந்தேகநபர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்த பலரின் பகுதியான ஜேம்ஸ் ஸ்மித் கிறீ நேசன் பகுதியில் 31 வயது டேமியன் சான் டெர்சனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கத்திக்குத்து தாக்குதல் சந்தேகநபர்கள் இருவரும் சகோதரர்கள் என தெரிவித்துள்ள  பொலிஸார் மைலெஸ்சான்டெர்சன் என்ற சகோதரர் தலைமறைவாகியுள்ளார் என  தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் உடல் ஜேம்ஸ் ஸ்மித் கிறீ நேசனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்னர் அது டேமியனின் உடல் என உறுதியாகியுள்ளது என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சோதனையிட்டுக்கொண்டிருந்த வீட்டிற்கு வெளியே புல்தரையில் உடல் காணப்பட்டது. உடலில் காயங்கள் காணப்பட்டன. அது அவர் தானாக ஏற்படுத்திக்கொண்ட காயம் என நாங்கள் கருதவில்லை என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

டேமியனின் சகோதரர் மைல்ஸ் இன்னமும் தலைமறைவாக உள்ளார் என தெரிவித்துள்ள காவல்துறையினர் பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுள்ளனர்.

தலைமறைவாகியுள்ள நபர் காயங்களிற்குள்ளாகியிருக்கலாம் அவர் மருத்துவ உதவியை நாடலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மைல்ஸ் குறித்து காவல்துறையினர் முன்னரே அறிந்திருந்தனர் அவர் தனிநபர்கள் மற்றும் பொதுச்சொத்துக்களிற்கு எதிரான குற்றங்களில் பல வருடங்களிற்கு முன்னரே ஈடுபட்டவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25