உடற்­ப­யிற்சி இயந்­தி­ரத்தில் தலை­கீ­ழாக சிக்கிக் கொண்ட பெண்

By Vishnu

06 Sep, 2022 | 03:23 PM
image

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் உடற்­ப­யிற்சி இயந்­தி­ரத்தில் தலை­கீழாக தொங்கிக் கொண்­டி­ருந்த பெண்­ணொ­ருவர், பொலி­ஸாரால் காப்­பாற்­றப்­பட்­டுள்ளார்.

ஒஹையோ மாநி­லத்தைச் சேர்ந்த கிறிஸ்டைன் போல்ட்ஸ் இப்பெண், ஒஹை­யோவின் பேரியா எனும் நக­ரி­லுள்ள உடற்­ப­யிற்சி நிலை­யத்­துக்கு சென்­றி­ருந்தார். 24 மணித்­தி­யா­லமும் இயங்கும் உடற்­ப­யிற்சி நிலையம் இது. 

அங்­குள்ள இயந்­தி­ர­மொன்றில், கிறிஸ்டைன் உடற்­ப­யிற்­சியில் ஈடு­பட்­டி­ருந்­த­போது, அவர் நீண்ட நேரம் தலை­கீ­ழாக தொங்கிக் கொண்­டி­ருக்கும் நிலைக்கு தள்­ளப்­பட்டார். 

அப்­போது அதி­காலை 3 மணி. உதவி கோரி கிறிஸ்டைன் போல்ட்ஸ் கூக்­கு­ர­லிட்டார்.  

அந்த உடற்­ப­யிற்சி நிலை­யத்­துக்குள் அவ்­வே­ளையில் இருந்த மற்­றொ­ருவர், வேறொரு அறையில் பளு­தூக்கும் பயிற்­சியில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்­ததால், கிறிஸ்­டைனின் கூக்­கு­ரலை அவர் கேட்க முடி­ய­வில்லை.

உடற்­ப­யிற்­சியில் ஈடு­ப­டு­வதால் தொலை­பே­சி­யையும் அவர் தன்­னுடன் வைத்­தி­ருக்­க­வில்லை. 

எனினும், சிறிது நேரத்தின் பின்னர், தனது கையில் கட்­டி­யி­ருந்த ஸமார்ட் வோட்சை பயன்­ப­டுத்தி, பொலிஸ் அவ­சர சேவைப் பிரி­வி­னரை கிறிஸ்டைன் தொடர்பு கொண்டார்.

சில நிமி­டங்­களின் பின்னர் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் அங்கு வந்து. கிறிஸ்­டைனை மீட்டார்.

தலை­கீ­ழாக தொங்கிக் கொண்­டி­ருந்ததால் தனக்கு தலை­வ­லியும் தலைச்­சுற்றும் ஏற்­பட்­ட­தாக அவர் தெரி­வித்­துள்ளார்.

அதே­வேளை, மீண்டும் அந்த உடற்­ப­யிற்சி இயந்­தி­ரத்தை தான் பயன்­ப­டுத்­தினால், தனக்கு அருகில் நண்பர் ஒருவர் இருப்பதை தான் உறுதிப்படுத்திக் கொள்வதற்குத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோத ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை...

2022-12-02 16:51:35
news-image

கடுமையான கொவிட்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கைவிடுகின்றதா சீனா?

2022-12-02 16:06:09
news-image

யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக புட்டினை சந்திக்க...

2022-12-02 15:22:57
news-image

தென் ஆபிரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம்: பொறியியல்...

2022-12-02 14:46:27
news-image

புலம்பெயர்ந்தவர்களால் இந்தியாவுக்கு இவ்வருடம் 100 பில்லியன்...

2022-12-02 13:20:58
news-image

இந்திய கடலோர காவல்படையில் நவீன எம்.கே.3...

2022-12-02 12:50:38
news-image

ஜனநாயகம் பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்கத்...

2022-12-02 12:46:26
news-image

ஐஎஸ் அமைப்பின் நெய்ல் பிரகாஸ் துருக்கியிலிருந்து...

2022-12-02 12:17:51
news-image

13,000 யுக்ரைன் படையினர் பலி :...

2022-12-02 13:45:14
news-image

பிரேஸில் மண்சரிவில் இருவர் பலி, 30...

2022-12-02 09:23:11
news-image

“ராவணன், ராட்சசன், ஹிட்லர்... என்னை விமர்சிப்பதில்...

2022-12-01 17:06:54
news-image

இந்தியாவின் கதையை பகிர ஜி-20 தலைமை...

2022-12-01 16:39:10