சேதுபந்தாசனம்

Published By: Devika

06 Sep, 2022 | 11:10 AM
image

டமொழியில் ‘சேது’ என்பதற்கு ‘பாலம்’ என்றும் ‘பந்த’ என்பதற்கு ‘பிணைக்கப்பட்ட’ என்றும் பொருள். உள்புற அழுத்தம் மற்றும் வெளிப்புறம் இழுக்கும் ஆற்றலும் ஒரு பாலத்தை பலமாக வைக்க உதவுவதுபோல், சேதுபந்தா­சனத்­தில் வயிற்றுப் பகுதி அழுத்தம் பெறுவதோடு முதுகுத்­தண்டு பகுதி நீட்சியடைந்து உடல் பலம் பெறுகிறது. 
சேதுபந்தாசனம் ஆங்கிலத்தில் Bridge Pose என்று அழைக்கப்படுகிறது. 

செய்முறை 

விரிப்பில் படுக்கவும். கால்களை மடக்கி இரண்டு பாதங்­களையும் தரையில் வைக்கவும். கணுக்கால் முட்டிக்கு நேர் கீழே இருக்க வேண்டும். கைகள் நீட்டியிருக்க வேண்டும். மூச்சை உள்ளிழுத்தவாறு பாதங்களையும் கைகளையும் தரை­யோடு அழுத்தி இடுப்பை மேல் நோக்கி உயர்த்தவும். தோள்கள் விரிந்திருக்க வேண்டும். கைகள் உடலின் அருகே இருக்கலாம். அல்லது உடலின் கீழ் இரண்டு கைவிரல்களும் பிணைந்திருக்கலாம். ஒரு நிமிடம் இந்நிலையில் இருக்க­வும். பின் இடுப்பைத் தரையில் வைத்து கால்களை நீட்டி ஆரம்ப நிலைக்கு வரவும்.

பலன்கள் 

முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது. முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது. கழுத்து, மார்பு பகுதிகளை விரிக்கிறது. நுரையீரலைப் பலப்படுத்துகிறது. இருதய நல­­னைப் பாதுகாக்கிறது. அதிக இரத்த அழுத்தத்தை சரி செய்ய உதவுகிறது. இடுப்பின் நெகிழ்வுத் தன்மையை அதிக­ரிக்­கி­­றது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்­படுத்துகிறது. தலைவலியைப் போக்க உதவுகிறது. மாத­விடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உபாதைகளை போக்க உதவு­கிறது. உடல் சோர்வைப் போக்குகிறது. தூக்கமின்­மை­யைப் போக்கு­கிறது. மனஅழுத்தத்தைப் போக்கி மனதை அமைதிப்­படுத்துகிறது. 

குறிப்பு 

தோள் அல்லது கழுத்தில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் சேதுபந்தாசனத்தைத் தவிர்க்கவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வரும்...

2025-02-06 18:23:31
news-image

புளித்த ஏப்பம் எனும் பாதிப்பிற்கான நிவாரண...

2025-02-05 17:36:36
news-image

புளூரல் எஃபியூஸன் எனும் நுரையீரலில் ஏற்படும்...

2025-02-03 16:01:24
news-image

தோள்பட்டை வலிக்கு உரிய நிவாரண சிகிச்சை

2025-02-01 20:35:14
news-image

யூஸ்டாச்சியன் குழாய் செயலிழப்பு எனும் காதில்...

2025-01-30 14:26:30
news-image

தழும்புகளில் ஏற்படும் வலிக்கான நிவாரண சிகிச்சை

2025-01-29 20:45:31
news-image

செர்வியோஜெனிக் தலைவலி பாதிப்புக்கான சிகிச்சை 

2025-01-27 19:26:02
news-image

மெரால்ஜியா பரேஸ்டெடிகா எனும் தொடை பகுதியில்...

2025-01-25 16:23:10
news-image

போஸ்ட் வைரல் ஓர்தரைடீஸ் எனும் காய்ச்சலுக்கு...

2025-01-22 17:01:32
news-image

வாய் வறட்சி எனும் உலர் வாய்...

2025-01-21 15:19:43
news-image

செபோர்ஹெக் டெர்மடிடிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2025-01-20 17:51:49
news-image

பிரஸ்பியோபியா எனும் பார்வை திறன் குறைபாட்டை...

2025-01-18 18:06:52