ஆரம்பப் போட்டியில் இந்தியாவுக்கு இலகுவான வெற்றி

Published By: Digital Desk 4

06 Sep, 2022 | 07:51 AM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் ஆங்காங்கே மழைநீர் மற்றும் சேர் நிறைந்த ஆடுகளத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்ற இந்தியாவுக்கும் பூட்டானுக்கும் இடையிலான 17 வயதுக்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்ட பி குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் இந்தியா 3 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றியீட்டியது.

மைதானத்தில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருந்ததால் பந்துபரிமாற்றங்கள் முறையாக அமையவில்லை. இதன் காரணமாக இரண்டு அணிகளும் சிரமங்களை எதிர்கொண்டன.

எனினும் போட்டியின் ??ஆவது நிமிடத்தில் ரிக்கி மீட்டேய் ஹாஓபாம் வலப்புறத்திலிருந்து பரிமாறிய பந்தை மிக இலாவகமாக தங்லால்சூன் கங்டே கோலாக்கி இந்தியாவை முன்னிலையில் இட்டார்.

சற்று நேரத்தில் கோரு சிங் திங்குஜம்  வலப்புறத்திலிருந்து   மிக நேர்த்தியாக பரிமாறிய பந்தை தலையால் முட்டி கங்டே தனது 2ஆவது கோலை புகுத்தினார்.

இடைவேளையின்போது இந்தியா 2 - 0 என்ற கோல்கள் கணக்கில் முன்னியில் இருந்தது.

இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்தபோது 47ஆவது நிமிடத்தில் பூட்டான் கோல் எல்லையில் இருந்து எகிறிவந்த பந்தை நோக்கி வேகமாக நகர்ந்த இந்திய அணித் தலைவர் வன்லான்பெக்கா குவிட்டே பலமாக உதைத்து தனது அணியின் 3ஆவது கோலைப் போட்டார்.

அதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளும் மாறிமாறி கோல் போடுவதற்கு முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சிகள் பலன் தரவில்லை. போட்டியின் கடைசிக் கட்டத்தில் பூட்டான் வீரர்கள் இந்திய எல்லையில் ஆதிக்கம் செலுத்திய வண்ணம் இருந்தனர். அவர்கள் கோலை நோக்கி உதைத்த பந்துகளை இந்திய கோல்காப்பாளர் சஹில் மிக இலகுவாக தடுத்து நிறுத்தினார்.

இறுதியில் இந்தியா 3 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் கழகத்தை...

2026-07-18 05:26:17
news-image

கோலாகல ஆரம்ப விழாவுடன் எல்பிஎல் தொடங்கியது;...

2026-07-18 00:35:39
news-image

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆறுதல் வெற்றியை...

2026-07-17 23:41:20
news-image

ஜெவ்னா கிங்ஸ் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியாகும்...

2026-07-17 15:31:54
news-image

இந்தியாவுடனான ஒருநாள் தொடரை இங்கிலாந்து சமப்படுத்தியது;...

2026-07-17 12:24:24
news-image

ஆட்ட நிர்ணயம் தொடர்பில் லங்கா பிறீமியர்...

2026-07-17 15:31:56
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட 19இன்கீழ் இலங்கை...

2026-07-16 20:31:40
news-image

கொழும்பு SSC மைதானத்தில் LPL தொடக்க...

2026-07-16 20:26:18
news-image

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம்,...

2026-07-16 18:24:57
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தலை விரைவில் நடத்துமாறு...

2026-07-16 15:53:48
news-image

போக்லண்ட் பதாகையை ஏந்தியதால் ஆர்ஜன்டினா மீது...

2026-07-16 18:22:47
news-image

தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் தலைவர்...

2026-07-16 15:04:06