மனித உரிமைகளை மீறும்  கம்பனிகளுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - வடிவேல் சுரேஷ்

Published By: Digital Desk 4

05 Sep, 2022 | 09:09 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும்  கம்பனிகளுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அத்தோடு அவர்களது நாட்ச் சம்பளம் 3,250 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

இன்றைய தினம் இராஜகிரியவில் அமைந்துள்ள இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பொருளாதார நெருக்கடிகள் உக்கிரமடைந்துள்ள நிலையில் பெருந்தோட்ட மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்களின் சம்பள உயர்வு தொடர்பான கலந்துரையாடல்கள் இன்றளவிலும் இழுபறி நிலையிலேயே காணப்படுகிறது. இந்நிலையிலேயே கோதுமை மா, மண்ணெண்ணெய் உட்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இரு மடங்காக அதிகரித்துள்ளன.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகள் கூட இன்றி 200 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். எனவே தான் நாம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 3,250 ரூபாவை வழங்குமாறு தொழில் ஆணைக்குழுவிற்கு கடிதம் மூலம் கோரியிருக்கின்றோம்.

இது தொடர்பில் சாதகமான பதில்கள் கிடைக்கவில்லை என்றால் அனைத்து தொழிற்சங்களும் இணைந்து எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம். இவ் விடயம் தொடர்பாக  அரசாங்கம் விரைந்து தோட்ட தொழிலாளர்கள் சார்பாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மேலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கம்பனிகள் மூலம் தொழில் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள்.

தொழிலாளர்களை பாதுகாக்கும் சட்டம்  கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக மனித உரிமைகள் மீறப்படுகின்றன. இது தொடர்பாக நாம் மூன்று சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் அழுத்தம் பிரயோகித்துள்ளோம். இது தொடர்பில் அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28