பிள்ளைகள், தாய்மாரின் மந்தபோசணை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம்

Published By: Digital Desk 5

05 Sep, 2022 | 03:59 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கையில் பிள்ளைகள் மற்றும் தாய்மாரின் மந்தபோசணை தொடர்பாக யுனிசெப் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பில் இரண்டுநாள் விவாதம் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமையும் (6) புதன்கிழமையும் (7) இடம்பெற இருக்கின்றது.

விவாதம் தொடர்பான பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்படும்.

பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை (6) இன்று முதல் எதிவரும் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடுவதற்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அதன் பிரகாரம் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலம் மற்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (நிர்வாகம்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் செவ்வாய்க்கிழமை (6) காலை 10.30 இல் இருந்து 10.45ம ணி வரை சமர்ப்பித்து, விவாதிக்காமல் அனுமதித்துக்கொள்ள இருக்கின்றது.

அத்துடன் வருட மத்தியில் அரச நிதி நிலைமை தொடர்பான அறிக்கை (2022 வருடத்துக்கான) தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 8 ஆம் திகதி நடத்த இருக்கின்றது.

நாட்டில் மே மாதம் இடம்பெற்ற கலவரத்தின்போது நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரள தொடர்பான அனுதாப பிரேரணை 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் விவசாய–உணவுக் கட்டமைப்புக்கு தீர்வுகளை உருவாக்க...

2026-08-19 10:47:48
news-image

சட்டவிரோதமாக கொண்டு வந்த சிகரெட்டுகளுடன் சீன...

2026-08-19 10:47:19
news-image

எல்நினோ தாக்கத்தால் இந்து சமுத்திர இருமுனை...

2026-08-19 10:21:24
news-image

இலங்கையின் கப்பல் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜேர்மன்...

2026-08-19 10:17:31
news-image

22ஆம் அரசியலமைப்புத் திருத்தம், நீதித்துறை திருத்தச்...

2026-08-19 10:00:21
news-image

கட்டுநாயக்க, ஹிரண, ஹோமாகமவில் பொலிஸார் முற்றுகை:...

2026-08-19 10:17:03
news-image

சுகாதார சமத்துவம், பெண்கள் தலைமைத்துவம் குறித்து...

2026-08-19 09:30:56
news-image

பணச்சலவை சட்டத்தின் கீழ் 19 வயது...

2026-08-19 09:30:19
news-image

வியட்நாம் - இலங்கை இடையே நேரடி...

2026-08-19 09:01:40
news-image

எல்.ரீ.ரீ.ஈ முகாம் தொடர்பான போலிப் பிரச்சாரம்:...

2026-08-19 09:19:42
news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36