நடமாடும் விபசார தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட நால்வரை பம்பலப்பிட்டி பொலிஸார் இன்று காலை கைதுசெய்துள்ளனர்.

நடமாடும் விபசாரத் தொழிலில் ஈடுபட்டுவந்த பெண்களை ஏற்றி இறக்கும் தொழில் ஈடுபட்டுவந்த கொழும்பைச் சேர்ந்த 36 வயதுடைய நபரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்கள் 23 முதல் 28 வயதுடையவர்களெனவும் மின்னேரியா, உடவளவ மற்றும் குண்டசாலை பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.