(லியோ நிரோஷ தர்ஷன்)
கடல் மற்றும் நிலத்தை மையப்படுத்திய சீனாவின் ஆக்ரோஷமான ஆக்கிரமிப்பு அணுகுமுறைகள் அண்டைய நாடுகள் மத்தியில் பெரும் நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளன. புவியியல் எல்லைகளை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி அண்டை நாடுகளை சீனா எச்சரித்து வருகிறது. இதனால் அண்டை நாடுகளுடனான அதன் கருத்து வேறுபாடுகளும் வெளியுறவுக் கொள்கை நோக்கங்களும் பிராந்தியத்தில் அச்சத்தின் நிழலைப் பரப்பியுள்ளது.
அரசியல், இராஜதந்திர மற்றும் இராணுவ மோதல்களின் வரிசையை உருவாக்குவதாகவே சீனாவின் பிராந்திய நகர்வுகள் அமைந்துள்ளன. சீனாவைப் பற்றிய பிராந்திய கருத்து வேறுபாடுகளின் எண்ணிக்கை தற்போது அதன் எல்லைப் பகிர்வு நாடுகளுடன் 17 சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளன. அவற்றில் குறைந்தது 7 நிலப்பரப்பு தொடர்பான பிராந்திய பிரச்சினைகளாகவே காணப்படுவதாக பூகோள அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
எவ்வாறாயினும், சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான மோதல் மிகவும் கொந்தளிப்பான சர்ச்சைகளில் ஒன்றாகும். இது மிக சமீபத்தில் இருதரப்பு இராணுவங்களுக்கு இடையே ஒரு அபாயகரமான மோதலுக்கு வழிவகுத்தது. இரு நாடுகளுமே எல்லை நெருக்கடியின் நீண்டகால வரலாற்றைக் கொண்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் கால்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு இராணுவத்திற்கும் இடையில் ஏற்பட்ட வன்முறை மோதல் காரணமாக அவதான நிலை மேலும் அதிகரித்துள்ளன.
எவ்வாறாயினும், இந்த சர்ச்சைகளின் அலைகளுக்குள், இந்தியத் தரப்புடனான சீனாவின் எல்லை கருத்து வேறுபாடுகளும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பூட்டானுடனான சீனாவின் நகர்வுகள் பிராந்திய அவதானத்திற்குள் உட்பட்டுள்ளன. பூட்டான், ஒரு சிறிய இமயமலை நிலத்தால் சூழப்பட்ட நாடாகும். சீனாவுடன் 470 கீலோ மீற்றர் நீளமான எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. அதே போன்று சீனா தனது இராஜதந்திர உறவுகளைப் பகிர்ந்து கொள்ளாத ஒரே எல்லை நாடாகவும் பூட்டான் காணப்படுகின்றது.
இரு நாடுகளும் 1988 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் தங்கள் எல்லைப் பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுப்பட்டு 2021 இல் இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. 1984 முதல் இரு நாடுகளுக்கும் இடையே எல்லைத் தீர்மானங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. சுமார் 24 சுற்றுப் பேச்சுக்கள் மற்றும் குறைந்தது 10 நிபுணர் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. எவ்வாறாயினும், அக்டோபர் 2021 இல் ஒரு புதிய சாலை வரைபட ஒப்பந்தம் உருவாக்கப்படும் வரை 37 ஆண்டுகளாக பேச்சு வார்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
பூட்டான் - சீனா எல்லைப் பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்துவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஆண்டு ஒக்டோபரில் கையெழுத்தான 'சாலை வரைபடம்' என்பது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமாகும். டொக்லாம் நெருக்கடி மற்றும் கொவிட் தொற்றுநோய் காரணமாக எல்லைப் பேச்சுவார்த்தைகளில் 5 வருட இடைவெளிக்குப் பிறகு இரு நாடுகளும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. குறிப்பாக பூட்டானுடனான எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க சீனத் தரப்பு இந்த 3 கட்ட சாலை வரைபடத்தில் கையெழுத்திட்டது.
எவ்வாறாயினும், சீன பேச்சுவார்த்தைகளின் தந்திரோபாயங்களைப் புரிந்துகொள்வதன் மூலம், சீனாவின் மூலோபாயத்தின் உண்மை நிலையை அறிந்துக்கொள்வது இங்கு முக்கியமாகின்றது. சீனாவுடனான பூட்டானின் எல்லைத் தகராறு பெரும்பாலும் இரண்டு தனித்தனி நிலப்பகுதிகளை மையப்படுத்தியதாகவே உள்ளன. இந்த சர்ச்சை வரலாற்று ரீதியாக டொக்லாமின் இந்தியா-சீனா-பூட்டான் முச்சந்திப் பகுதியை உள்ளடக்கியதாகும். இது 270 சதுர கி.மீ. பரப்பளவை கொண்ட பகுதி என்பதுடன் 2017 ஆம் ஆண்டில் 70 நாள் முறுகல்; ஏற்பட்ட நிலப்பரப்பாகும்.
இருப்பினும், சீனா மற்றும் பூட்டான் இடையேயான மூன்று கட்ட சாலை வரைபடத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே 2012 இல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த பகுதியான முச்சந்தி பகுதி சேர்க்கவில்லை. மறுப்புறம் எல்லையை மையப்படுத்திய எந்தவொரு முச்சந்தி எல்லை பிரச்சனையும் மூன்று நாடுகளும் சம்பந்தப்பட்டால் மாத்திரமே தீர்க்கப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் இருந்து வெளிப்பட்ட பிராந்திய தகராறு குறித்து இந்தியாவும் சீனாவும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், இந்த செயல்முறை எதிர்காலத்தில் சாத்தியமில்லை.
பூட்டானும் சீனாவும் எதிர்கொள்ளும் மற்ற எல்லைப் பிரச்சினைகளில் ஒன்றான திபெத்துக்கு அருகில் உள்ள வடக்கு பூட்டானின் பசம்லுங் மற்றும் ஜகர்லுங் ஆகியவை அடங்குகின்றன. 1997 ஆம் ஆண்டில் சீனா - பூட்டானிடம் ஒரு 'தொகுப்பு ஒப்பந்தத்தை' முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. அதில் பூட்டானின் சர்ச்சைக்குரிய வடக்கு மற்றும் மத்திய பகுதிககளில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுப்பட சீனா தயாராக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது டொக்லாம் உட்பட அதன் மேற்குப் பகுதியான பசம்லுங் மற்றும் ஜகர்லுங் பள்ளத்தாக்குகளை உள்ளடக்கியதாகவே சீன ஆர்வம் வெளிப்பட்டுள்ளது.
தங்கள் மூலோபாய நலன்களைப் பாதுகாக்கும் தங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்க பூட்டானியர்கள் தயாராக இல்லாததால் இந்த முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது. மறுபுறம், சீனா மேற்குப் பகுதிகளைத் தெளிவாகக் குறிவைத்து நகர்ந்தது. சும்பி பள்ளத்தாக்குடன் மூலோபாய நன்மைகளைத் சீனா கவனத்தில் கொண்டதுடன், டொக்லாம் வழியாக சிலிகுரி தாழ்வாரத்தின் மீது வாய்ப்பை வழங்கும் என சீன கருதுதியது.
பூட்டான் நிலத்தில் உள்கட்டமைப்பைக் கட்டியமைப்பதன் மூலம் அத்துமீறல்கள் குறித்த பூட்டானின் அக்கறைக்கு சீனா எந்தச் சந்தர்ப்பத்திலும் கவனம் செலுத்தவில்லை;. மாறாக எப்போதும் டொக்லாம் நிலை நிறுத்தத்தை மையப்படுத்திய சீன தந்திரங்களுக்கு ஒரு சான்றாக இருந்தது. எவ்வாறாயினும் ஆச்சரியப்படும் விதமாக, 2020 ஆம் ஆண்டில், சீனத் தரப்பு இந்த விடயத்தை மேலும் சிக்கலாக்கும் வகையில், கிழக்கு பூட்டானில் உள்ள ட்ராஷிகாங் பகுதியில் உள்ள சக்டெங் வனவிலங்கு சரணாலயத்தின் (740 சதுர கிமீ) உரிமையை கோரியதன் மூலம் தங்கள் பிராந்திய உரிமைகோரலை விரிவுபடுத்தியது.
பூட்டானின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் உள்ள சில முக்கியமான பிரதேசங்களை விட்டுக்கொடுக்குமாறு பூட்டானுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் சீனா ஈடுப்பட தொடங்கியுள்ளது. கிழக்கு பூட்டான் பிரதேசத்தின் மீதான இத்தகைய சீன நகர்வை உலகெங்கிலும் பரவலாக காணப்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது.
எவ்வாறாயினும், சீனா தனது 3 கட்ட சாலை வரைபடத்தின் மூலம் எழுச்சி பெற விரும்பும் இந்த பிராந்திய எல்லைகள், பூட்டான் பிரதேசத்தில் அதன் நீட்டிக்கப்பட்ட உரிமைகோரல்களைப் போலவே கேலிக்குரியவையாகும். இந்தியத் தரப்புடனான பேச்சுவார்த்தைகளைத் தடம்புரளச் செய்வதற்கும், தங்கள் சொந்த நிலைப்பாடுகளுக்குச் செல்வாக்கு செலுத்துவதற்கும், சீனர்கள் இத்தகைய முக்கியமான சூழ்நிலைகளில் தங்கள் சொந்த வழிமுறையைக் கையாள்வதற்கான நகர்வாகவே இந்த வரைபட திட்டத்தை வெளியிட்டுள்ளனர்.
தற்போது சீனர்களுடன் பிராந்திய எல்லை தகராறுகளை எதிர்கொண்டுள்ள நாடுகள் உலகிற்கு சுட்டிக்காட்ட விரும்பும் இத்தகைய மோசமான தந்திரோபாயங்களுக்கு எச்சரிக்கையுடன் கவனம் செலுத்த வேண்டும். பிராந்திய உரிமைகோரல்களில் அதிகப்படியான எல்லை மீறல் என்பது அதே மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும். தென் சீனக் கடல் நெருக்கடி அத்தகைய தந்திரோபாயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM