வருமான வரி, சுங்க திணைக்களத்தின் 600 பேரை பின் தொடரும் உளவுத் துறை

Published By: Digital Desk 4

04 Sep, 2022 | 08:45 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

கோடீஸ்வர வர்த்தகர்களுக்கும், தமக்கு நெருக்கமானோருக்கும்  வரி செலுத்துவதிலிருந்து தப்பிக்க உதவி செய்வதாக கூறப்படும் சுங்கம் மற்றும் வருமான வரி திணைக்களத்தின் அதிகாரிகள்  தொடர்பில் உளவுப் பிரிவு சிறப்பு அறிக்கையொன்றினை  அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளது.

சுமார் 600 அதிகாரிகள் தொடர்பில் இவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் மேலும் அவதானம் செலுத்தி மேலதிக விடயங்களை அறிவிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவித்தன.

 சுங்கத் திணைக்களம் மற்றும் வருமான வரித் திணைக்களம்  ஆகியவற்றால் வசூலிக்க முடியுமான சுமார் 10 ஆயிரம் கோடி ரூபா வருமானம், அத்திணைக்களத்தில் அதிகாரிகளின் மோசடி மற்றும் கவனக் குறைவுகளால் அரசாங்கத்துக்கு இல்லாமல் போவதாக  அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இவ்வாறான நிலையிலேயே சுமார் 600 அதிகாரிகள் குறித்து உளவுத் துறை அரசனக்கத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 இவ்வாறான நிலையில், அரசாங்கம், அரசின் வருமானத்தை முகாமைத்துவம் செய்ய,  வருமான முகாமைத்துவ நிறுவனம் ஒன்றை அமைப்பது தொடர்பில் ஆலோசித்து வருகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க...

2026-07-13 11:20:46
news-image

மட்டக்களப்பு தளவாய் வீட்டுத்திட்ட வீதியை புனரமைக்குமாறு...

2026-07-13 11:00:38
news-image

பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ;...

2026-07-13 11:13:39
news-image

இலங்கையின் அதிக வயதான பெண்களில் ஒருவரான...

2026-07-13 10:20:18
news-image

வேளாண்மைத் துறையை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும்...

2026-07-13 09:54:26
news-image

களுத்துறை மாவட்ட செயலகத்தில் திடீர் தீ...

2026-07-13 09:56:19
news-image

சில மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில்...

2026-07-13 09:25:14
news-image

பேராதனை, கொழும்பு ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்களுடன்...

2026-07-13 09:18:27
news-image

டெங்கு அபாயத்தால் மூடப்பட்டிருந்த கட்புல, அரங்கேற்றக்...

2026-07-13 09:16:08
news-image

மஹரகமவில் துப்பாக்கியுடன் இளைஞர் கைது!

2026-07-13 09:06:29
news-image

தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் விடங்களில்...

2026-07-13 08:53:19
news-image

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும்,...

2026-07-13 09:14:36