தமிழ் திரை உலகில் தாயை முன்னிலைப்படுத்தி ஏராளமான படைப்புகள் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த வகையில் டைம் ட்ராவல் என்னும் அறிவியல் புனைவு உத்தியை பயன்படுத்தி, தாய் பாசத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கணம்'. இந்தத் திரைப்படம் இம்மாதம் எட்டாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தயாரித்திருக்கும் திரைப்படம் 'கணம்'. 'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமான தெலுங்கு நடிகர் சர்வானந்த் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ரீது வர்மா நடித்திருக்கிறார்.
இவர்களுடன் ரமேஷ் திலக், சதீஷ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கதையின் மைய புள்ளியான அம்மா கதாபாத்திரத்தில் நடிகை அமலா நடித்திருக்கிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்திக்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''ஒருமுறை என்னை பாரம்மா என்ற இந்த வரிகள் தான் இந்த படத்தின் ஆன்மா. எம்முடைய தாயாரை நினைத்து இரண்டு ஆண்டுகளாக இப்படத்தின் கதையை எழுதினேன். எழுதும்போது நடிகை அமலா அவர்களை மனதில் வைத்து தான் எழுதினேன். அவரை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதிக்க வைத்தது தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவின் அணுகுமுறை. அவரும் கதையை கேட்டதும் உடனே நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். டைம் ட்ராவல் என்னும் அறிவியல் புனைவு விடயத்தை உணர்வு பூர்வமான தாய் பாசத்திற்காக நாயகன் பயன்படுத்துகிறார். இது பார்வையாளர்களை வசீகரிக்கும் என நம்புகிறேன்'' என்றார்.
:கணம்' தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே தருணத்தில் தயாராகி வெளியாகவிருப்பதாலும், டைம் ட்ராவல் என்னும் ஃபேன்டஸியான விடயத்தை புரிந்து கொள்ளப்படாத தாய்ப்பாசத்திற்காக நாயகனால் பயன்படுத்தப்படுகிறது என்பதாலும், இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியான குறுகிய நேரத்தில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM