விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகும் 'ஆர்யன்'

Published By: Digital Desk 5

03 Sep, 2022 | 12:35 PM
image

நடிகர் விஷ்ணு விஷால் சொந்தமாக தயாரித்து நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு 'ஆர்யன்' என பெயரிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் கே. பிரவீண் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஆர்யன்'. நடிகர் விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் வாணி போஜன் ஆகிய இரண்டு நடிகைகள் நடிக்கிறார்கள். 

இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் அழுத்தமான வேடத்தில் நடிக்கிறார். சுபாஷ் விஷ்ணு ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். 

க்ரைம் திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை விஷ்ணு விஷாலின் சொந்த பட நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என அனைத்து இந்திய மொழிகளிலும் தயாரிக்கிறது. 

'ஆர்யன்' படத்தை பற்றிய அறிவிப்பை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மோஷன் போஸ்டராக நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டிருக்கிறார்.

'த பர்பெஃக்ட் கிரைம் ஸ்டோரி: என்ற டேக் லைனுடன் தயாராகும் இந்த திரைப்படம் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் பான் இந்திய  படமாகும். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'எஃப். ஐ. ஆர்' வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படம் என்பதாலும், இவர் தற்போது நடித்து வரும் 'மோகன்தாஸ்' மற்றும் 'கட்டா குஸ்தி' ஆகிய படங்களின் படப்பிடிப்பு நிறைவு செய்யும் நிலையில் இருப்பதாலும், 'ஆர்யன்' எனும் பெயரில் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right