தேரரின் இனவாதப்பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம்

By Priyatharshan

15 Nov, 2016 | 11:47 AM
image

( சசி)

மட்டக்களப்பு விகாரதிபதி அம்பிட்டிய சுமண ரத்தன தேரர் நில அபகரிப்பை தடுப்பதற்கு சென்ற பட்டிப்பளை பிரதேச செயலக குழவினரையும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை தேசிய இனங்களையும் அரசாங்க உத்தியோகத்தர் ஒருவருவரையும் மிக கடுமையாக இனத்துவேச வார்த்தைகளை பயன்படுத்தி  திட்டிய சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

அம்பிட்டிய தேரரின் இனவாத பேச்சையும் அடாவடித்தனத்தையும் கண்டித்தும் பிரதேச செயலக அலுவலர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்னால்  இன்று குறி்த்த கண்டன ஆர்பாட்டமொன்று இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right