(என்.வீ.ஏ.)
ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் நிறைவுபெற்ற ஏ குழுவுக்கான ஆசிய கிண்ண கடைசி லீக் போட்டியில் ஹொங்கொங்கை 155 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றி கொண்ட பாகிஸ்தான், சுப்பர் 4 சுற்றில் பங்குபற்ற 4ஆவது அணியாக தகுதிபெற்றது.
ஒரு பக்க சார்பாக நடைபெற்ற இப் போட்டியில் சகலதுறைகளிலும் திறமையை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அமோக வெற்றியீட்டியது.
மொஹம்மத் ரிஸ்வான், பக்கார் ஸமான், குஷ்தில் ஷா ஆகியோரது திறமையான துடுப்பாட்டங்களும் ஷதாப் கான், மொஹம்மத் நவாஸ், நசீம் ஷா ஆகியோரின் துல்லியமான பந்துவிச்சுகளும் பாகிஸ்தானின் வெற்றியை சுலபமாக்கின.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 20 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 193 ஓட்டங்களைக் குவித்தது.
3ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 13 ஓட்டங்களாக இருந்தபோது அணித் தலைவர் பாபர் அஸாம் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததும் ஹொங்கொங் பெரு மகிழ்ச்சி அடைந்தது.
ஆனால், அதன் பின்னர் ஆரம்ப வீரர் மொஹம்மத் ரிஸ்வான், பக்கார் ஸமான் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 80 பந்துகளில் 116 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
41 பந்துகளை எதிர்கொண்ட பக்கார் ஸமான் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 53 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து ரிஸ்வான், குஷ்தில் ஷா ஆகிய இருவரும் 23 பந்துகளில் 64 ஓட்டங்களைக் குவித்து இருபது 20 ஆசிய கிண்ணக் கிரிக்கெட்டில் சாதனைமிகு மொத்த எண்ணிக்கையை பாகிஸ்தான் குவிப்பதற்கு உதவினர்.
மொஹம்மத் ரிஸ்வான் 57 பந்துகளில் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் ஆட்டம் இழக்காமல் 78 ஓட்டங்களையும் குஷ்தில் ஷா 15 பந்துகளில் 5 சிக்ஸ்களுடன் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும் குவித்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் 10.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 38 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மோசமான தோல்வியைத் தழுவியது.
சர்வதேச இருபது 20 கிரக்கெட் போட்டியில் ஹொங் கொங் பெற்ற மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை இதுவாகும்.
ஹொங்கொங்கின் மொத்த எண்ணிக்கையில் 10 உதிரிகளே அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது. துடுப்பாட்டத்தில் ஒரு வீரரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெறவில்லை. அணித் தலைவர் நிஸாகத் கான் அதிகபட்சமாக 8 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ஷதாப் கான் 8 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மொஹம்மத் நவாஸ் 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நசீம் ஷா 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM