ட்ரம்பின் சித்தாந்தம் அமெரிக்க ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் : ஜனாதிபதி ஜோ பைடன்

Published By: Digital Desk 4

02 Sep, 2022 | 10:30 PM
image

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களின் அமெரிக்காவை மீண்டும் மாபெரும் ஒன்றாக மாற்றுவோம் என்ற  நிகழ்ச்சித் திட்டமானது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகவுள்ளதாக  அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன் அந்நாட்டு நேரப்படி நேற்று முன்தினம்  வியாழக்கிழமை இரவு  பென்சில்வேனிய மாநிலத்தில் ஆற்றிய முக்கிய  உரையின் போது தெரிவித்தார்.

அவர் அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனம்  கைச்சாத்திடப்பட்ட பிலடெல்பியா நகரிலுள்ள சுதந்திர மண்டபத்திலிருந்து மேற்படி உரையை ஆற்றினார்.

இதற்காக  இரு வருடங்களுக்கு முன்னர் ட்ரம்பிற்கு வாக்களித்த 74 மில்லியன் அமெரிக்கர்களையோ அன்றி குடியரசுக்கட்சியைச் சேர்ந்த ஒவ்வொருவரையுமோ தான் குற்றஞ்சாட்டவில்லை என அவர் கூறினார். ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாட்டைப் பின்னோக்கிக் கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்நிலையில்  கட்சியைச் சேர்ந்த உயர்மட்ட உறுப்பினரான கெவின் மக்கார்தி உரையாற்றுகையில், ஜோ பைடன் அமெரிக்க ஆன்மாவை படுகாயப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் அதிகார சமநிலையைத் தீர்மானிக்கவுள்ள  இடைக்காலத் தேர்தல் ஆரம்பமாவதற்கு இரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் மேற்படி இருவரது விமர்சனங்களும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17