மண்டபம் அகதிகள் முகாமில் திருடர்களுக்காக வைக்கப்பட்ட மின் இணைப்பில் வீட்டின் உரிமையாளரே சிக்கி உயிரிழப்பு

By T Yuwaraj

02 Sep, 2022 | 07:31 PM
image

(மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட் )

தமிழகத்தின் இராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் வீட்டிற்கு யாரும் திருட வரக் கூடாது என்பதற்காக திருடர்களுக்காக வீட்டின் கதவில்  வைத்திருந்த  மின் இணைப்பை வீட்டின் உரிமையாளரே   தொட்டு மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை(2) காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

இராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில்  ராமலிங்கம் என்பவர் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் ராமலிங்கத்தின் வீடு தனியாக இருந்து வருவதால் அவரது வீட்டில் உள்ள பொருட்களை திருடர்கள் யாரும் திருடி சென்று விடக்கூடாது என்பதற்காக அவர் வெளியே செல்லும் போதெல்லாம் வீட்டின் கதவில் மூலம் மின் இணைப்பை  வைத்து செல்வது வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டின் கதவில் மின் இணைப்பு வைத்திருந்ததை  மறந்து மின் இணைப்பு வைத்த ராமலிங்கமே அவரது வீட்டின் கதவை தொட்ட போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மண்டபம் பொலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் திருடர்களுக்காக வைக்கப்பட்ட மின் இணைப்பில் அவரை சிக்கி உயிரிழந்த சம்பவம் மண்டபம் முகாம் பகுதி உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது:

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாயில்லா ஆட்டுக் குட்டிகளுக்கு தாயாக மாறி...

2022-11-30 20:56:56
news-image

3 கிலோ தலைமுடியை உட்கொண்ட சிறுமி...

2022-11-30 11:47:48
news-image

தேவாலயமொன்றின் அனைத்து பிக்குகளும் போதைப்பொருள் சோதனையில்...

2022-11-30 10:17:35
news-image

எகிப்தில் தங்க நாக்கு கொண்ட மம்மிகள்...

2022-11-29 17:30:21
news-image

ஓநாய் போன்று காட்சியளிக்கும் இளைஞன் -...

2022-11-29 14:48:10
news-image

நபரின் வயிற்றிலிருந்த 187 நாணயங்களை அறுவை...

2022-11-29 13:19:19
news-image

அவுஸ்திரேலிய கடற்கரையில் நிர்வாணமாக திரண்ட கூட்டம்...

2022-11-27 15:57:42
news-image

140 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்ட பறவை...

2022-11-28 09:09:26
news-image

உல்லாசக் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்த இளைஞர்...

2022-11-26 19:50:58
news-image

வரலாற்றில் இன்று - மிரபால் சகோதரிகள்...

2022-11-25 13:00:05
news-image

195 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக...

2022-11-24 18:27:49
news-image

 உலகின் வயதான பூனை : கின்னஸ்...

2022-11-24 17:31:12