குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறென பிக்குகள் பொலிஸ் முறைப்பாடு : தமிழ் தேசிய கட்சி உறுப்பினர்களிடம் விசாரணை

Published By: Vishnu

02 Sep, 2022 | 05:23 PM
image

கே .குமணன் 

ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள தொல்லியல் பிரதேசமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கு  நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், வினோ நோகராதலிங்கம் முன்னாள் மாகாணசபை  உறுப்பினர்களான  துரைராசா ரவிகரன் ,கந்தையா சிவநேசன் ஆகியோர்  இடையூறாக இருப்பதாகவும், பலதடவைகள் தாம் குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எடுத்த முயற்சிக்கு இவர்கள்  இடையூறாக இருந்ததாக முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்தில் குருந்தூர் மலையில் இருக்கின்ற  பௌத்த பிக்குகள் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம் கடந்த சில தினங்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட முல்லைத்தீவு பொலிஸார் 02 ஆம் திகதி முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள வருகைதருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதன்படி முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் கந்தையா சிவநேசன் ஆகியோர் இன்று (02)பொலிஸ் நிலையத்துக்கு வருகைதந்த நிலையில் அவர்களிடம் மிக நீண்டநேரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் வாக்குமூலம் பெற்று கையொப்பம் வாங்கி கொண்டுள்ளனர். 

வாக்குமூலம் பெற்றுக்கொள்ள பொலிஸார் மேற்கொண்ட விசாரணை தொடர்பில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிக்கையில் , 

கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த தேரர்களால் கபோக் கல்லினால் செய்யப்பட்ட புத்தர் சிலை ஒன்றை வைப்பது  தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் இணைந்து ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டமை தொடர்பில் தமது பௌத்த வழிபாடு தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து மணலாறு சம்புமல்ஸ்கட விகாரையின் தேரர் கல்கமுவ சாந்தபோதி தேரர் மற்றும் ஏனைய தேரர்களால் எமக்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்ட்டுள்ளமைக்கு அமைவாக இன்று என்னிடம் ஏனைய மக்கள் பிரதிநிதிகளிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர் அதாவது ஜூன் 12 நடைபெற்ற போராட்டத்தில் எத்தனை பேர் கலந்துகொண்டார்கள் . 

பொதுமக்கள் யாரெல்லாம் வந்தார்கள் அவர்களுடைய பெயர் விபரங்கள் வருகைதந்த ஊடகவியலாளர்களின்  பெயர் விபரங்கள் போன்றவற்றை கேட்டு நீண்ட விசாரணையை செய்த பொலிஸார் எம்மிடம் வாக்குமூலம் பதிந்து கொண்டதோடு கையொப்பமும் பெற்றுக்கொண்டார்கள். நான் நினைக்கிறேன் எம்மை நீதிமன்றில் நிறுத்த பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்படுவதாக நாங்கள் எவருக்கும் எந்தவித இடையூறும் இன்றி ஜனநாயக ரீதியில் அன்றையதினம் போராட்டம் மேற்கொண்டோம் . எனவே பொலிஸார் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டு சட்டத்தை மீறுபவர்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டு செயற்பட்டிருந்தால் நாங்கள் இவ்வாறு போராடவேண்டி ஏற்பட்டிருக்காது . ஆனால் இன்று மாறாக ஜனநாயக ரீதியில் போராடிய எம்மை அழைத்து விசாரணை செய்துள்ளனர் என தெரிவித்தார் . நாடாளுமன்ற உறுப்பினர்கள் வினோ மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பொலிஸ் விசாரணைக்கு முல்லைத்தீவு போலீசாரால் அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் இன்று வருகைதரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25