வவுனியாவில் சீரற்ற காலநிலையால் விவசாயிகள் பாதிப்பு

By Vishnu

02 Sep, 2022 | 05:08 PM
image

வவுனியா 

வவுனியாவில் சீரற்ற காலநிலை காரணமாக விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

15 ஆயிரத்து 150 ஏக்கர் அளவில் வவுனியா மாவட்டத்தில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு 12 ஆயிரத்து 909  ஏக்கர் வரை நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து நெல் அறுவடை செய்யும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் கடந்த சிலநாட்களாக வவுனியா மாவட்டத்தில் பெய்து வருகின்ற மழை காரணமாக 2240.25 ஏக்கர் வரையிலான நெல் அறுவடையினை மேற்கொள்வதற்கு விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக கடந்த காலங்களில் டீசல் மற்றும் உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலைமையிலும் தமது வாழ்வாதாரமான நெற்செய்கையினை கைவிடமால் தொடர்ந்து மேற்கொண்டிருந்தனர். அத்தோடு இச்சிறுபோகத்தின் போது ஒரு அந்தர் உரத்தினை சுமார் 40,000 ரூபா வரையில் கொள்வனவு செய்தே இவ் நெற்செய்கையினை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற மழை காரணமாக நெல்லினை அறுவடை செய்வதில் பாரிய சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 

எனவே இதனை கருத்திற்கொண்டு அரசாங்கம் தமக்கான உதவியினையோ அல்லது நிவாரத்தினையோ தந்துதவ வேண்டும் என்பதே வவுனியா மாவட்ட விவசாயிகளின் வேண்டுகோளாக உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38
news-image

2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்...

2022-11-28 19:57:39
news-image

மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் நழுவிச்செல்லும்...

2022-11-28 19:54:34