முல்லைத்தீவில் இலவச அமரர் ஊர்தி சேவை

By Digital Desk 5

02 Sep, 2022 | 05:12 PM
image

கே .குமணன் 

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் V.P Foundation அறக்கட்டளை நிறுவனத்தால் இலவச அமரர் ஊர்தி சேவை இன்றைய தினம் (02) காலை 11.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இதன் பிரதான நோக்கமாக பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கான இலவச அமரர் ஊர்தி சேவை வழங்குதலாகும். முற்றுமுழுதாக V.P Foundation அறக்கட்டளை நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆரம்ப நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டார். 

அத்தோடு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா , வடமாகாண அவைத்தலைவர் சி வி கே சிவஞானம்  , முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாதர சேவைகள் பணிப்பாளர், கரைதுறைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி, மாவட்ட சட்ட வைத்திய நிபுணர், V.P Foundation அறக்கட்டளை நிறுவனத்தின் ஸ்தாபகர் மற்றும் பயனாளர்கள். எனப் பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்