(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
முதலீடுகள் தொடர்பாக நாட்டில் இருந்துவரும் கலாசார ரீதியிலான எதிர்ப்பே நாட்டின் அபிவிருத்திக்கு பாதிப்பாக இருந்து வருகின்றது.
இந்த கலாசாரத்தில் இருந்து நாங்கள் மீளவேண்டும்.அத்துடன் நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு யார் பொறுப்பு கூறவேண்டும் என்பதை ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தில் இருந்து உணர்ந்துகொள்ள முடியுமாகவுள்ளது என எதிர்க்கட்சி உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பொருளாதார முகாமைத்துவம் செய்யும் மிகவும் பின்தங்கிய நாடாக இலங்கை இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துவருகின்றனர்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு 74வருடகால ஆட்சி செய்தவர்கள் பொறுப்பல்ல. கடந்த 2வருட ஆட்சியாளர்களும் அதிகாரிளுமே பொறுப்புக்கூறவேண்டும்.
என்பதை ஜனாதிபதியின் வரவு செலவு திட்ட அறிக்கையில் இருந்து விளங்கிக்கொள்ளலாம். அதேநேரம் இந்த நெருக்கடிக்கு ஆட்சியாளர்களில் ஒருசிலரே காரணமாகும். இவர்கள் யார் என்பதை எதிர்காலத்தில் தேடிப்பார்க்க வேண்டும்.
அத்துடன் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக இருப்பது, வெளிநாட்டு முதலீடுகளுக்கு எமது நாட்டில் இருந்துவரும் கலாசார ரீதியிலான எதிர்பாகும்.
அம்பந்தோட்ட துறைமுகத்தை இந்தியாவுடன் அல்லது சீனாவுடன் இணைந்து முன்னேற்ற நடவடிக்கை எடுக்கும்போது துறைமுகத்தை விற்கப்போவதாக தெரிவிக்கின்றனர்.
துறைமுகத்தில் ஒரு பகுதியை முதலீடுசெய்யும்போது துறைமுகத்தை விற்பனை செய்வதாக தெரிவித்தனர். இவ்வாறு எமது வளங்களை முதலீடுசெய்து நாட்டுக்கு வருமானம் சேர்ப்பதும் இல்லை.
வேறு நபர்களுடன் இணைந்து முதலீடுசெய்வதற்கு இடமளிப்பதும் இல்லை. இந்த கலாசாரத்தில் இருந்து நாங்கள் மீள வேண்டும்.
அதேபோன்று நட்டமடைந்து வரும் நிறுவனங்களை தனியார் மயமாக்கி லாபமீட்டும் நிறுவனங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கும்போது அதற்கும் எதிர்ப்பு. தனியார் மயமாக்குவது என்பது பயங்கரமான விடயமல்ல. லாபமீட்டுவதற்கு தனியார் மயமாக்குவதே சிறந்த முறையாகும்.
மேலும் தேர்தல் காலத்தில் அரசியல் ரீதியில் வழங்கப்படும் வாக்குறுதிகள் காரணமாகவும் பொருளாதாரம் பாதிக்கப்படுகின்றது. அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற பணம் இல்லாது போகும்போது பணம் அச்சிடப்படுகின்றது. இதனால் வருமானம் குறைந்து பணவீக்கம் ஏற்படுகின்றது.
மேலும் 2021இல் நாட்டில் வருமானத்தில் 86வீதம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும் 71வீதம் பெற்றுக்கொண்ட கடனுக்கு வட்டி செலுத்துவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் கல்வி, சுகாதாரம் போன்ற முக்கியமான துறைகளுக்கு ஒதுக்குவதற்கு நிதி இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் 2019இல் 15வீதமாக இருந்த வருமான வரி 8வீதமாக குறைத்து. உலகில் குறைந்த வருமானம் அறவிடும் நாடு இலங்கையாகும்.
அதிலும் நேரடி வருமானம் 2வீதமே அறவிடப்படுகின்றது. அமேரிக்கா போன்ற நாடுகளில் நேரடி வரி மாத்திரமே இருக்கின்றது. மறைமுக வரி இல்லை. அதனால்தான் பொருட்களின் கட்டுப்படுத்தப்படுகின்றது. மக்களுக்கு நிவாரணம் கிடைக்கின்றது.
அதனால் எமது வரிக்கொள்கையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளவேண்டும். அதேபோன்று மத்திய வங்கியை சுயாதீனப்படுத்த வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM