(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம் வசீம்)
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தூரநோக்கமற்ற வகையில் இரசாயன உரத்தை தடை செய்ததால் இன்று நாட்டு மக்கள் உணவிற்காக போராடுகிறார்கள்.
நாட்டை வேண்டுமென்றே வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் தற்போது மக்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறார்கள். சுய சிந்தனையற்றவர்கள் பொருளாதாரத்தை நிர்மூலமாக்கிய பஷில் ராஜபக்ஷ முன்னிலையில் தலைகுனிந்துள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றில் வெள்ளிக்கிழமை (2) இடம்பெற்ற இடைக்கால வரவு – செலவு திட்டத்தின் மீதான மூன்றாவது நாள் விவாதத்தின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகத்தை கொண்டு நாடு வங்குரோத்து நிலையை அடையும் சூழலில் உள்ளது என்பதை தொடர்ந்து குறிப்பிட்டோம், இருப்பினும் எமது கருத்தை அரசாங்கம் மதிக்கவில்லை. இரசனையான கதைகளை குறிப்பிட முடியும்,ஆனால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.
நாட்டின் பொருளாதாரத்தை நிர்மூலமாக்கிய முன்னாள் நிதியமைச்சரிடம் தலைகுனிந்து உரையாற்றும் பலர் பாராளுமன்றில் உள்ளார்கள்.
சுயாதீனமாக செயற்பட முடியாதவர்களே இவ்வாறு செயற்படுகிறார்கள். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரனம் வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது
போராட்டத்தில் ஈடுப்படும் மக்களை அடக்குவதற்கு அவதானம் செலுத்தப்படுகிறது ஆனால் உணவு பணவீக்கத்தையோ,பணவீக்கத்தையோ கட்டுப்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை. நாட்டின் நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கவில்லை.
திருடர்களை பாதுகாக்கும் வகையில் செயற்படும் தலைவருக்கு எவ்வித ஒத்துழைப்பையும் வழங்க முடியாது. இடைக்கால வரவு செலவு செலவு திட்டத்தில் எவ்வித புதிய விடயங்களும் குறிப்பிடப்படவில்லை. கல்வி,சுகாதாரம் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவில்லை.
உலகில் உணவு பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 5ஆவது இடத்தில் உள்ளது. ஏதிர்வரும் நாட்களில் முதலிடத்தை பெறும். 2017 மற்றும் 2018ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் உணவு பணவீக்கம் குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை வகித்தது,இன்று நிலைமை தலைகீழாக மாற்றமடைந்துள்ளது.
நடுத்தர குடும்பங்களின் உணவு கோப்பையில் போசனை மட்டம் குறைவடைந்துள்ளது. மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றை பெற்றுக்கொள்வது நடுத்தர மக்களுக்கு பெரும் போராட்டமாக உள்ளது.
மறுபுறம் விவசாயத்துறை நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. இரசாயன உரத்தை தடை செய்து முழு நாட்டு மக்களையும் உணவிற்காக போராட செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பொறுப்புக்கூற வேண்டும்.
எவ்வித சிந்தனையுமில்லாமல் பொறுப்பற்ற வகையில் நாணயத்தை அச்சிட்டு பணவீக்கத்தை தீவிரப்படுத்திய மத்திய வங்கியின்
முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் பொறுப்புக்கூற வேண்டும். தவறான தீர்மானங்களை எடுத்து இவர்கள் முழு நாட்டையும் பாதாளத்திற்குள் தள்ளியள்ளார்கள். அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் பெயரில் தனியார்மயப்படுத்த இடமளிக்க முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM