கஹவத்தையில் மாபெரும் விநாயர் சதுர்த்தி ஊர்வலம்

By Digital Desk 5

02 Sep, 2022 | 02:03 PM
image

இரத்தினபுரி - கஹவத்தை நகரில் மிக பிரமாண்டமான முறையில் இம்முறை விநாயகர் சதுர்த்தி பெருவிழா கொண்டாடப்படவுள்ளது. 

இலங்கை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் 4 ம் திகதி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கஹவத்தை சர்வோதய கட்டிடத்திற்கு அருகில் மாலை 3 மணிக்கு விநாயக சதுர்த்தி ஊர்வலம் ஆரம்பமாகவுள்ளது. 

இந்த ஊர்வலமானது, கஹவத்தை நகர் வழியாக கெட்டியத்தனை இறப்பர் தொழிற்சாலை வரை செல்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு கெட்டியத்தனை இறப்பர் தொழிற்சாலைக்கு அருகாமையில், சுவாமியின் விஷர்ஜனம் (கரைத்தல்) இடம்பெறவுள்ளது. 

அனைத்து பக்தர்களையும் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளுமாறு ஏற்பாட்டு குழு அழைப்பு விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்